Kayal Serial: செவிளில் விழுந்த பளார்.. உன் உறவே வேண்டாம்.. கண்ணாடியாக உடைந்த கயல்! - உச்சக்கட்டத்தில் கயல் சீரியல்!-sun tv kayal serial today promo episode on september 04 2024 indicates elil ready to separate kayal everyone shocked - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: செவிளில் விழுந்த பளார்.. உன் உறவே வேண்டாம்.. கண்ணாடியாக உடைந்த கயல்! - உச்சக்கட்டத்தில் கயல் சீரியல்!

Kayal Serial: செவிளில் விழுந்த பளார்.. உன் உறவே வேண்டாம்.. கண்ணாடியாக உடைந்த கயல்! - உச்சக்கட்டத்தில் கயல் சீரியல்!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 04, 2024 08:43 AM IST

Kayal Serial: அம்மா மீது கைவைத்த மூர்த்தி.. உறவே வேண்டாம் என்ற எழில்.. அதிர்ச்சியில் உறைந்து நின்ற கயல் - கயல் சீரியலில் இன்று!

Kayal Serial: செவிளில் விழுந்த பளார்.. உன் உறவே வேண்டாம்.. கண்ணாடியாக உடைந்த கயல்! - உச்சக்கட்டத்தில் கயல் சீரியல்!
Kayal Serial: செவிளில் விழுந்த பளார்.. உன் உறவே வேண்டாம்.. கண்ணாடியாக உடைந்த கயல்! - உச்சக்கட்டத்தில் கயல் சீரியல்!

அந்த பிரச்சினையில் எழில் பெரிய, பெரிய வார்த்தைகளை பேச, கயலோ, ஏன் இப்போது இப்படியெல்லாம் பேசுகிறீர்கள் என்று கேட்டாள். அதற்கு எழில் இனி உனக்கும், எனக்கும் எந்த உறவும் கிடையாது என்றான். இதைக் கேட்டு உச்சபட்ச அதிர்ச்சிக்கு சென்ற கயல், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றாள்.

கயல் சீரியலில் நேற்று நடந்தது என்ன?

கயல் சீரியலின் நேற்றைய எபிசோடில், கயலின் ஆடைக்குத் தீ வைக்க முயன்ற தீபிகாவை தனியே அழைத்த கயல், அவளிடம் உன்னுடைய திட்டமெல்லாம் எனக்குத்தெரியும். உனக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை என்று எச்சரித்தாள். மேலும், எழிலுக்கு என்னைதான் பிடித்திருக்கிறது என்றும் நானே அவனை விட்டாலும் அவன் என்னை விடமாட்டான் என்றும் கூறியதோடு, நீ தயவு செய்து எழிலிடம் இருந்து விலகிவிடு என்று கூறினாள். 

ஆனால், தீபிகாவோ இப்போதும் சொல்கிறேன். உனக்கு திருமணத்திற்கு முன்னதான எல்லா சடங்குகளும் முறைப்படி நடக்கலாம். ஆனால் எழில் நிச்சயமாக என்னுடைய கழுத்தில் தான் தாலி கட்டுவார் என்று சவால் விட்டாள். இதையடுத்து சவால் மூடிக்குள் வந்த கயல், உன்னையெல்லாம் அப்படியே தீயில் எரிய விட்டிருக்க வேண்டும். இப்போதும் சொல்கிறேன், உன்னால் அது முடியாது என்றாள். இதையடுத்து தீபிகா கோபமாக கயல் வீட்டில் இருந்து கிளம்பினாள்.

கலங்கிய அம்மா

இதற்கிடையே தீபிகா சொன்ன வார்த்தைகள் கயலின் அம்மாவின் மனதை போட்டு பிசைய, அவரோ கணவரின் போட்டோவின் முன் நின்று, தீபிகா சொன்னது போல நம் கயலுக்கு நடந்து விடக்கூடாது. வாழ்க்கை முழுவதுமே கஷ்டத்தை மட்டுமே பார்த்த அவள் எழில் அவளுக்கு கிடைத்த பின்புதான், சந்தோஷமாக வாழ்வாள் என்ற நம்பிக்கை எனக்கு வந்தது. அந்த நம்பிக்கை கடைசி வரை எனக்கு வேண்டும் அதற்கு நீங்கள் தான் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டிருந்தாள்.

இதை கயல் மறைமுகமாக பார்த்து விட்டாள். இதையடுத்து உள்ளே வந்த கயல், எழில் அப்படியான பையன் கிடையாது. அவன் பணக்காரன் என்பதற்காக, நல்ல மனது அவனிடம் இல்லை என்று சொல்லி விட முடியாது. அவன் என்னை நன்றாக பார்த்துக் கொள்வான். நானும் அவர்கள் வீட்டிற்கு சென்ற பின்னர், சிவசங்கரி அம்மாவின் மனதை மாற்றி,நல்லபடியாக குடும்பம் நடத்துவேன் என்று ஆறுதல் சொன்னாள்.

குத்திக்காட்டிய சிவசங்கரி

இதற்கிடையே கயிலின் வீட்டிற்கு வந்த சிவசங்கரி, கயலின் குடும்பம் ஏழைக் குடும்பம் என்பதை குத்தி காட்டும் வகையில் அவர்களது வீட்டில் உள்ள பொருட்களை பற்றி தரக்குறைவாக பேசினாள். 

அத்துடன் கயல் எழிலை கல்யாணம் செய்துகொண்ட பின்னர், டிப் டாப்பாக மாற வேண்டும் என்றும் ஏழை குடும்பத்து வீட்டு பெண்ணாக வெளியே தெரியக்கூடாது என்றும் வலியுறுத்தினாள். கடைசியாக அவளது அண்ணன் மூர்த்தியின் பிசினஸை பற்றி பேசிய சிவசங்கரி, அவனுடைய பிசினஸ் டெவலப் ஆவ்வதற்காக 50 லட்சம் செக்கை நீட்டினாள். இதை பார்த்து அனைவரும் திகைத்து நின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.