Kayal serial: கயல் பக்கம் சாய்ந்த ராஜி.. கடுப்பின் உச்சத்தில் தர்மலிங்கம்.. குளிர்ந்து போன கயல்! -கயல் சீரியலில் இன்று!-sun tv kayal serial today latest episode promo on august 28 th and 2024 rajalakshmi support kayal dharmalingam shocked - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Kayal Serial: கயல் பக்கம் சாய்ந்த ராஜி.. கடுப்பின் உச்சத்தில் தர்மலிங்கம்.. குளிர்ந்து போன கயல்! -கயல் சீரியலில் இன்று!

Kayal serial: கயல் பக்கம் சாய்ந்த ராஜி.. கடுப்பின் உச்சத்தில் தர்மலிங்கம்.. குளிர்ந்து போன கயல்! -கயல் சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 28, 2024 02:49 PM IST

Kayal serial: நீங்கள்தான் கயல் கல்யாணத்தை முன்னின்று நடத்தி வைக்க வேண்டும் என்று தர்மலிங்கத்திடம் சொல்ல, தர்மலிங்கமும், வடிவும் அதிர்ச்சியடைந்து நின்றார்கள். - கயல் சீரியலில் இன்று!

Kayal serial: கயல் பக்கம் சாய்ந்த ராஜி.. கடுப்பின் உச்சத்தில் தர்மலிங்கம்.. குளிர்ந்து போன கயல்! -கயல் சீரியலில் இன்று!
Kayal serial: கயல் பக்கம் சாய்ந்த ராஜி.. கடுப்பின் உச்சத்தில் தர்மலிங்கம்.. குளிர்ந்து போன கயல்! -கயல் சீரியலில் இன்று!

அப்போது பேசிய ராஜலட்சுமி, நடந்த எல்லாவற்றையும் நான் மறந்து விட்டேன். நீங்கள்தான் கயல் கல்யாணத்தை முன்னின்று நடத்தி வைக்க வேண்டும் என்று தர்மலிங்கத்திடம் சொல்ல, தர்மலிங்கமும், வடிவும் அதிர்ச்சியடைந்து நின்றார்கள். 

இதையடுத்து தனியாக ராஜலட்சுமியிடம் பேசிய தர்மலிங்கம், அவரிடம், ஏன் திடீரென்று கயலுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருக்கிறாய். அவள் செய்த துரோகத்தை மறந்து விட்டாயா என்று கேட்டார். ஆனால் ராஜலட்சுமி எதை எதையோ சொல்லி கயல் பக்கமே நின்றாள். அத்துடன் கல்யாணத்திற்கு எல்லா பிரபலங்களையும் தானே வரவைப்பதாகவும் அவள் கூறினாள். இதில் தர்மலிங்கம் கோபத்தில் கொந்தளித்து நின்றார். 

கடந்த எபிசோடில் நடந்தது என்ன? 

நேற்றைய கயல் சீரியல் எபிசோடில் கயல் குடும்பத்தினர் சேலை வாங்குவதற்காக ராஜலட்சுமியின் கடைக்கு சென்று இருந்தார்கள். அங்கு எல்லோரும் சேலை எடுப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, கயலின் அம்மா மட்டும் தர்மலிங்கமும், வடிவும் வரவில்லையே என்பதற்காக கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் மூர்த்தி, தர்மலிங்கத்திற்கு போன் செய்து தயவு செய்து கடைக்கு வருமாறு வலியுறுத்தினான். ஆனால் தர்மலிங்கமோ நீங்கள் கூப்பிட்டால், நாங்கள் உடனே வந்து விட வேண்டுமா?.. நேற்று ஒரு மாதிரி பேசுவீர்கள். இன்று இன்னொரு மாதிரி பேசுவீர்கள்… எங்களைப்பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று சாடினார். 

வார்த்தையை விட்ட தர்மலிங்கம் 

அத்துடன் வார்த்தைகளை கடுமையாக விட்டு, அவனைத் திட்டி, போனை வைத்தார். இது குறித்து மூர்த்தியும் அவரது அம்மாவும் பேசிக்கொண்டே வந்து கொண்டிருக்கும்போதே, இதனை கடையில் இருந்த ராஜலட்சுமி பார்த்து விட்டாள்.. இதையடுத்து என்ன விஷயம் என்று கேட்க, வீட்டிற்கு மூத்தவர் என்ற முறையில் தர்மலிங்கம் இங்கே வந்திருக்க வேண்டும். 

ஆனால் அவர் கோபித்துக் கொண்டு வர மறுத்துக் கொண்டிருக்கிறார் என்று கயலின் அம்மா கூறினாள். இதையடுத்து ராஜலட்சுமி தர்மலிங்கத்திற்கு போன் செய்து உடனே கடைக்கு கிளம்பி வாருங்கள் என்று கூறினார். அதை சற்றும் எதிர்பார்க்காக தர்மலிங்கம் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார். இருப்பினும் ராஜலட்சுமி சொன்னதால் அவர் கடைக்கு வந்தார். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.