This Week OTT Release : இந்த வாரம் ஓடிடி-யில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆக போகுதாம்.. இதோ லிஸ்ட் பாருங்க!-so many films are going to release in ott this week - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  This Week Ott Release : இந்த வாரம் ஓடிடி-யில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆக போகுதாம்.. இதோ லிஸ்ட் பாருங்க!

This Week OTT Release : இந்த வாரம் ஓடிடி-யில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆக போகுதாம்.. இதோ லிஸ்ட் பாருங்க!

Divya Sekar HT Tamil
Sep 06, 2024 10:52 AM IST

This Week OTT Release : தமிழைப் பொறுத்தவரை இந்த வாரம் ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்கத்தில் நகுல் நடித்த வாஸ்கோடகாமா படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.

This Week OTT Release : இந்த வாரம் ஓடிடி-யில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆக போகுதாம்.. இதோ லிஸ்ட் பாருங்க!
This Week OTT Release : இந்த வாரம் ஓடிடி-யில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆக போகுதாம்.. இதோ லிஸ்ட் பாருங்க!

வாஸ்கோடகாமா படம்

நடிகர் நகுல் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் பிரபல தமிழ் நடிகை தேவயானியின் இளைய சகோதரர் ஆவார். நகுல் நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் படம் அவருக்கு தமிழ் சினிமாவில் ஹீரோ அந்தஸ்த்தைப் பெற்றுத் தந்தது. இதைத்தொடர்ந்து மாசிலாமணி, தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், வல்லினம், நான் ராஜாவாகப் போகிறேன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இந்நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வாஸ்கோடகாமா படம் இன்று ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்த படத்தில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நடிகர் முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இருள்

கடந்த 2021ம் ஆண்டு பிரபல நடிகர் பகத் பாசில் நடிப்பில் வெளியான இருள் என்ற மலையாள திரைப்படம் இன்று ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது மலையாள திரைப்படமாக இருந்தாலும், ஓடிடி தளத்தில் தமிழிலும் இது வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தலவன்

பிரபல மலையாளத் திரைப்பட நடிகர் பிஜு மேனன் நடிப்பில் உருவான திரைப்படம் தான் தலவன். கடந்த மே மாதம் 2024ல் இந்த திரைப்படம் வெளியான நிலையில், வருகின்ற செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. பிஜு மேனன் எப்போதும் மிகவும் கடுமையாக இருக்கும் ஒரு போலீஸ் அதிகாரி. எல்லோரிடமும் மிக கடுமையாக நடந்து கொள்பவர். இந்த ஸ்டேஷன்க்கு மற்றோரு கடுமையான போலீஸ் அதிகாரியாக ஆசிப் அலி வருகிறார்.

இருவருமே மிக கடுமையானர்வர்கள் என்பதால், ஈகோ முட்டிக்கொள்கிறது, இந்த நிலையில் பிஜு மேனன் மனைவியை ஒருத்தன் கத்தியால் வெட்டுகிறான், இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் பிஜு மேனன் வீட்டில், தன மனைவியை வெட்டியவனின் மனைவியின் உடல் சடலமாக இருக்க, அதன் பின் நடக்கும் சுவாரஸ்யமே இந்த தலவன் .

அடியோஸ் அமிகோ

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அடியோஸ் அமிகோ திரைப்படம், இன்று நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. நஹாஸ் நாசர் இயக்கிய 'அடியோஸ் அமிகோ', இருவருமே எதிர்பார்க்காத, வெவ்வேறு வாழ்க்கைத் தரங்களைச் சேர்ந்த இரண்டு அந்நியர்களை ஒன்றாகக் கொண்டுவருகிறது. அவர்கள் ஒன்றாகப் பயணிக்கும்போது, ​​அவர்கள் ஒருவருக்கொருவர் உலகத்தின் விரைவான காட்சிகளைப் பிடிக்கிறார்கள், தொடர்பு மற்றும் நகைச்சுவையின் தருணங்களை உருவாக்குகிறார்கள். ஆசிப் அலி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு நடித்துள்ள இந்த ரோட் மூவி ஒரு பீல் குட் நகைச்சுவை திரைப்படமாக அமைந்துள்ளது.

பவி கேர் டேக்கர்

நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளருமான வினீத் குமார், திலீப் முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் பவி கேர் டேக்கர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்தப் படத்தை திலீப்பின் கிராண்ட் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. கன்னடம் மற்றும் மலையாளத்தில் வெற்றி பெற்ற மிதுன் முகுந்தன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். நடிகர்கள் திலீப்புடன் ஜானி ஆண்டனி, ராதிகா சரத்குமார், தர்மஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் பவி கேர் டேக்கர் படம் இன்று வெளியாகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.