Sivakarthikeyan: நீங்க வாழ்க்கை கொடுத்தீங்களா?.. ‘ அப்படி சொல்லி சொல்லியே..’ - மேடையில் காரமாக பேசிய சிவகார்த்திகேயன்!-sivakarthikeyan latest speech about soori ps vinoth raj kottukkali audio launch - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sivakarthikeyan: நீங்க வாழ்க்கை கொடுத்தீங்களா?.. ‘ அப்படி சொல்லி சொல்லியே..’ - மேடையில் காரமாக பேசிய சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan: நீங்க வாழ்க்கை கொடுத்தீங்களா?.. ‘ அப்படி சொல்லி சொல்லியே..’ - மேடையில் காரமாக பேசிய சிவகார்த்திகேயன்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 13, 2024 05:12 PM IST

Sivakarthikeyan: நான் யாரையும் கண்டுபிடித்து நான்தான் இவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தேன். இவர்களை நான் தான் ரெடி செய்தேன் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால், என்னை அப்படி சொல்லி சொல்லி பழக்கி விட்டார்கள். ஆனால் நான் அந்த மாதிரியான ஆள் கிடையாது - சிவகார்த்திகேயன்!

Sivakarthikeyan: நீங்க வாழ்க்கை கொடுத்தீங்களா?.. ‘ அப்படி சொல்லி சொல்லியே..’ - மேடையில் காரமாக பேசிய சிவகார்த்திகேயன்!
Sivakarthikeyan: நீங்க வாழ்க்கை கொடுத்தீங்களா?.. ‘ அப்படி சொல்லி சொல்லியே..’ - மேடையில் காரமாக பேசிய சிவகார்த்திகேயன்!

ராட்டர்டாம் விருது விழாவில் விருது பெற்றது

அவர் பேசும் போது, “ அருண்தான் முதலில் எனக்கு வினோத்தை அறிமுகப்படுத்தினார். அப்போது அவர் கூழாங்கல் படத்தை எடுத்திருந்தார். அந்த படம் ஏதோ காரணங்களுக்காக ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இதற்கிடையே அந்த திரைப்படம் ராட்டர்டாம் விருது விழாவில் விருது பெற்றது என்றும் இந்த விருதான அறிமுக இயக்குநர்களுக்கு கொடுக்கப்படும் விருது என்றும் இதில் உலகில் உள்ள அனைத்து படங்களுக்கு போட்டிப்போடும் என்றும் அருண் கூறினார். மேலும் இந்த விருதை முன்னதாக பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் வாங்கி இருப்பதாகவும் சொன்னார். அதைக்கேட்ட உடன் நான் அப்படியே ஆடிப்போய்விட்டேன்.

இதையடுத்து வினோத்திடம் பிரதர், உங்களுக்கு எந்த ஊர் என்று கேட்க, அவர் மதுரை தான் என்றார். நான் அப்படியே அதிர்ச்சியாகி நின்று விட்டேன். மதுரையில் இருந்து வந்த ஒருவர், இவ்வளவு பெரிய சாதனையை செய்திருக்கிறார். இதனை பெரிய கொண்டாட்டமாக மாற்றி இருக்க வேண்டுமே என்று நினைத்தேன். இதனையடுத்து நான் வினோத்திடம் உங்களின் அடுத்த படத்தை நான் தயாரிக்கிறேன். அது என்ன கதையாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும் என்றேன். அப்படி நான் சொன்னதற்கான ஒரே காரணம், வினோத் ராஜ் என்ற ஒருவரை கொண்டாட வேண்டும் என்பதற்காக மட்டும்தான்.

நம் ஊரில் இருந்து ஏன் நல்ல படங்கள் வருவதில்லை

அவர் கதை சொல்ல வரும்பொழுது கூட, எனக்கு முழு கதையையெல்லாம் சொல்ல வேண்டாம். அப்படி சொன்னால் கதை அப்படி இருக்கலாம், இப்படி இருக்கலாம் என்று விவாதம் ஏற்படும். ஆகையால் நீங்கள் பட்ஜெட்டை மட்டும் ஒர்க் அவுட் செய்து கொடுங்கள் என்று கூறினேன். நம் ஊரில் இருந்து ஏன் நல்ல படங்கள் வருவதில்லை என்ற கேள்வியை நாம் தொடர்ந்து வைத்துக் கொண்டே இருக்கிறோம். அதை இங்கு பல இயக்குநர்கள் செய்து கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அதையும் தாண்டி, நாம் ஒரு அடி முன்னே வைக்க வேண்டும் என்றால், இப்படி ஒரு விஷனோடு வருகிறவர்களை, எந்த கேள்வியும் கேட்காமல், அவர்களின் விஷனோடு அவர்களை விடுவதுதான் சரியானதாக இருக்கும் என்று எனக்குத் தோன்றியது.

எதிர்நீச்சல் படத்தின் போது தனுஷ் உடன் சிவகார்த்திகேயன்!
எதிர்நீச்சல் படத்தின் போது தனுஷ் உடன் சிவகார்த்திகேயன்!

வினோத் இந்த படத்தில் எல்லாவிதமான அரசியலையும் பேசியிருக்கிறார். ஆனால் எதையும் அவர் கருத்தாக திணிக்கவில்லை. நான் யாரையும் கண்டுபிடித்து நான்தான் இவர்களுக்கு வாழ்க்கை கொடுத்தேன். இவர்களை நான் தான் ரெடி செய்தேன் என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால், என்னை அப்படி சொல்லி சொல்லி பழக்கி விட்டார்கள். ஆனால் நான் அந்த மாதிரியான ஆள் கிடையாது.

இந்தப்படம் வெற்றி அடைந்து எனக்கு லாபம் வந்தால், அந்த லாபத்தை எடுத்து வினோத்தின் அடுத்த படத்திற்கான முன் பணமாக நான் கொடுப்பேன். அடுத்து உங்களுக்கு என்ன படம் எடுக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ அதை எடுங்கள். அந்தப் படத்திலும் நான் லாபம் கிடைத்தால், வினோத் ராஜ் போன்ற இயக்குநர்களை தேடி கண்டுபிடித்து, அவர்களுக்கும் வாய்ப்பு கொடுப்பேன். அதை கண்டுபிடித்து தருவதற்கு எனக்கு அருண் இருக்கிறார்.

மியூசிக் டைரக்டர் கிடையாது

வினோத் என்னிடம் இந்த படத்திற்கு மியூசிக் டைரக்டர் கிடையாது என்று சொன்னார். அதைக் கேட்டதும் எனக்கு ஒரு நிமிடம் என்ன இப்படி சொல்கிறாரே என்று தோன்றியது. ஆனால் அதன் பின்னர் அவர் அப்படி செய்வதற்கான காரணத்தை எனக்கு புரிய வைத்தார் இந்த படம் திரையரங்கில் ஓடி என்ன சம்பாதித்தாலும் பரவாயில்லை. இந்தப்படத்தை பார்ப்பதற்கு எத்தனை பேர் திரையரங்கிற்கு வருகிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் எங்கள் குழு ஒரு புது அனுபவத்தை கொடுக்கும் என்பதை நான் இங்கு சொல்லிக் கொள்கிறேன்.

இந்தப்படத்தை இவ்வளவு இயக்குநர்கள் வந்து சப்போர்ட் செய்ய இங்கு வந்திருக்கிறார்கள். இயக்குநர்களாவது இவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்களே என்று நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. அது அப்படியே இருக்கட்டும் இயக்குநர்கள் நீங்கள் ஒற்றுமையாக இருந்து, வித்தியாசமான படைப்புகளை கொடுக்கும் பொழுதுதான், நாங்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க முடியும். ” என்று பேசினார்.

முன்னதாக, மெரினா படத்தில் அறிமுகமான சிவகார்த்திகேயனுக்கு வெற்றிமாறன் உதவி இயக்குநரான துரை இயக்கத்தில் எதிர்நீச்சல் படத்தை அமைத்துக்கொடுத்தார் தனுஷ். அந்தப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படங்கள் கொடுத்து நட்சத்திர நடிகராக உயர்ந்தார். ஆனால், இதற்கிடையே இருவருக்கும் இடையே கருத்து முரண்பாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.