தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sivakarthikeyan: மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி?

Sivakarthikeyan: மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி?

Aarthi Balaji HT Tamil
May 30, 2024 01:10 PM IST

Sivakarthikeyan: சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

 மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி?
மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி?

ட்ரெண்டிங் செய்திகள்

இரண்டு குழந்தைகள்

இவருக்கு தெலுங்கிலும் நல்ல ரசிகர்கள் இருக்கிறார்கள். சிவகார்த்திகேயன் தனது காதலியான ஆர்த்தியை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆராதனா மற்றும் குகன் தாஸ் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு சென்னையில் சொந்த வீடு உள்ளது.

இவர் தனது சொந்த கிராமமான திருவீழிமிழலையில் புதிதாக வீடு ஒன்றையும் சமீபத்தில் கட்டினார். இத்துறையில் நுழைந்த 11 ஆண்டுகளில் சிவகார்த்திகேயன் 125 கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளார். நடிகராக மட்டுமல்ல சொந்த தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கிறார் சிவகார்த்திகேயன்.

ஆர்த்தி மூன்றாவது முறையாக கர்ப்பம்

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன், ஆர்த்தி மற்றும் அவரது மூத்த மகள் ஒரு பிறந்தநாள் விழாவிற்கு சென்று இருக்கிறார்கள்.

வீடியோ வெளியாகி வைரல்

அதில் பார்க்கும் போது ஆர்த்தி மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. ஆர்த்தி கர்ப்பமாக இருக்கும் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் ரசிகர்கள் பலரும், தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

அமரன் 

சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்தில் நடித்து வந்தார். உலகநாயகனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். எஸ்கே 21 என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப் படத்தின் டீசர் பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாகி, இதுவரை 25 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. படத்தின் பெயர், அமரன்.

இதுவரை காமெடிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர்களிலும், குடும்ப உறுப்பினர்களைக் கவரும் விதமாகவும் நடித்து வந்த சிவகார்த்திகேயன், இந்த அமரன் படத்தில் முழுக்க அதிரடி ஹீரோவாக தோன்றி உள்ளார். ராணுவ வீரர் போல் உடல் கட்டமைப்பைப் பெறுவதற்காக, படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு, கடும்பயிற்சியை சிவகார்த்திகேயன் மேற்கொண்டுள்ளார். படம் தொடங்கப்படும்போது, சிவகார்த்திகேயனின் ஒர்க் அவுட் வீடியோவை படக்குழுவினர் பகிர்ந்து, அவரை உற்சாகப்படுத்தினர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரிலும், சில காட்சிகள் சென்னை, புதுச்சேரி மற்றும் கேரளாவிலும் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்