Singer Suchitra: ‘பிரியங்கா எந்த மாதிரி பொம்பள’ - மணிமேகலைக்கு ஆதரவாக பேசிய பாடகி சுசித்ரா!-singer suchitra opens about priyanka and vj manimegalai issue - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singer Suchitra: ‘பிரியங்கா எந்த மாதிரி பொம்பள’ - மணிமேகலைக்கு ஆதரவாக பேசிய பாடகி சுசித்ரா!

Singer Suchitra: ‘பிரியங்கா எந்த மாதிரி பொம்பள’ - மணிமேகலைக்கு ஆதரவாக பேசிய பாடகி சுசித்ரா!

Aarthi Balaji HT Tamil
Sep 16, 2024 05:10 PM IST

Singer Suchitra: பிரியங்கா எந்த மாதிரியான பொம்பள என்று அவளுடைய முன்னாள் கணவரை கேட்டால் தெரியும். அவர் என்னுடைய தம்பி பையன் என்று பாடகி சுசித்ரா கூறினார்.

Singer Suchitra: ‘பிரியங்கா எந்த மாதிரி பொம்பள’ - மணிமேகலைக்கு ஆதரவாக பேசிய பாடகி சுசித்ரா!
Singer Suchitra: ‘பிரியங்கா எந்த மாதிரி பொம்பள’ - மணிமேகலைக்கு ஆதரவாக பேசிய பாடகி சுசித்ரா!

பாடகி சுசித்ரா பேட்டி

அதில், “ குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்ன அவ்வளவு முக்கியமா? மணிமேகலையின் துணிச்சலான செயலை நான் பாராட்டுகிறேன். நான் அவருக்கு தான் ஆதரவாக நிற்கிறேன். நிகழ்ச்சியை விட்டு வெளிவந்த பிறகு மணிமேகலை தெளிவான வீடியோ பதிவு செய்து இருக்கிறார்.  அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்து வீடியோ போட தனியான துணிச்சல் அந்த பெண்ணுக்கு இருக்கிறது.

என் தம்பி மாதிரி

பிரியங்கா எந்த மாதிரியான பொம்பள என்று அவளுடைய முன்னாள் கணவரை கேட்டால் தெரியும். அவர் என்னுடைய தம்பி பையன். ரொம்பவும் நல்ல பையன், நேர்மையானவன். அவனுடைய வாழ்க்கையை நாசம் ஆக்கிட்டா. இதை பற்றி நான் பேசினால் வதந்தி கிளம்புகிறேன் என்று சொல்வார்கள். இந்த விஷயத்தில் என்னுடைய ஆதரவு மணிமேகலைக்கு தான் “ எனக் குறிப்பிட்டு உள்ளார்.

மிகுந்த நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் நான் எப்பொழுதும் எனது 100% முயற்சிகளையும் கடின உழைப்பையும் குக் வித் கோமாளிக்கு கொடுத்திருக்கிறேன். 2019 ஆம் ஆண்டு, நவம்பரில் இருந்து குக் வித் கோமாளி என்னும் ஸ்ட்ரெஸ் பஸ்டர் நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது இருந்தே என் உழைப்பைத் தந்திருக்கிறேன்.

சுயமரியாதை முக்கியம்

ஆனால், சுய மரியாதையைவிட முக்கியமானது எதுவுமில்லை! என் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் நான் அதைக் கண்டிப்பாகப் பின்பற்றுகிறேன். புகழ், பணம், தொழில், வாய்ப்புகள் அல்லது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. சுய மரியாதை என்று வரும்போது எல்லாமே இரண்டாம் பட்சம்தான். அதனால் நான் குக் வித் கோமாளி சீசன் 5ல் இருந்து விலகுகிறேன்.

இந்த சீசனில் மற்றொரு பெண் தொகுப்பாளர் ஆதிக்கம் செலுத்தினார். குறிப்பாக தொகுப்பாளராக இருக்கும் ஒருவர் இந்த குக் வித் கோமாளி சீசன் 5ன் படி, நிகழ்ச்சியின் சமையல்காரராக செயல்பட வேண்டும். ஆனால், அவர் அதை அடிக்கடி மறந்து விடுகிறார். வேண்டுமென்றே என்னை வேலையைச் செய்யவிடாமல் தடுத்து, எனது ஆங்கரிங் என்னும் நெறியாள்கையில் குறுக்கிடுகிறார்.

நமது உரிமைகளைக்கேட்பதும், கவலையை எழுப்புவதும்கூட இந்த குக் வித் கோமாளி சீசன் 5ல் குற்றமாகிவிடும். ஆனால், என் மனது எப்போதும் எது சரியானதோ அதற்காக குரல் எழுப்பும். நான் யாரைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. பல எதிர்மறை மற்றும் சிலரின் ஆதிக்கம் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் அசல் தன்மையை மறைக்கிறது. இது நான் முன்பு வேலை செய்து மகிழ்ந்த அதே குக் வித் கோமாளி நிகழ்ச்சி அல்ல. எனவே, நான் இனி அதன் பகுதியாக தொடரமாட்டேன் " எனக் குறிப்பிட்டார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.