Singappenne Serial: காயத்ரிக்கு வச்ச செக்.. அன்பு தாய்க்கு தெரியவந்த உண்மை - சிங்கப் பெண்ணே சீரியல்-singappenne serial today episode promo on october 1 2024 indicates gayathri is in trouble - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singappenne Serial: காயத்ரிக்கு வச்ச செக்.. அன்பு தாய்க்கு தெரியவந்த உண்மை - சிங்கப் பெண்ணே சீரியல்

Singappenne Serial: காயத்ரிக்கு வச்ச செக்.. அன்பு தாய்க்கு தெரியவந்த உண்மை - சிங்கப் பெண்ணே சீரியல்

Aarthi Balaji HT Tamil
Oct 02, 2024 07:08 AM IST

Singappenne Serial: அன்பு வேலையை விட்டு சென்றதை ஆனந்தியால் சற்றும் ஏற்று கொள்ளவே முடியவில்லை. அதனால் ஜெயந்தி, சௌந்தர்யாவை அழைத்து கொண்டு அன்பு வீட்டிற்கு சென்றார் ஆனந்தி.

Singappenne Serial: காயத்ரிக்கு வச்ச செக்.. அன்பு தாய்க்கு தெரியவந்த உண்மை - சிங்கப் பெண்ணே சீரியல்
Singappenne Serial: காயத்ரிக்கு வச்ச செக்.. அன்பு தாய்க்கு தெரியவந்த உண்மை - சிங்கப் பெண்ணே சீரியல்

தயக்கத்தில் ஆனந்தி

அன்பு வேலையை விட்டு சென்றதை ஆனந்தியால் சற்றும் ஏற்று கொள்ளவே முடியவில்லை. அதனால் ஜெயந்தி, சௌந்தர்யாவை அழைத்து கொண்டு அன்பு வீட்டிற்கு சென்றார் ஆனந்தி. ஆனால் உள்ளே சென்று பேச ஆனந்திக்கு சற்று தயக்கம் ஏற்பட்டது. அதனால் ஜெயந்தி, சௌந்தர்யாவிடம், “ நீங்க உள்ளே சென்று பேசுங்கள். நான் பின்னால் வந்து இணைந்து கொள்கிறேன் “ என்றார் ஆனந்தி. இப்படி சூழல் இருக்க அன்புவிடம் வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து பணம் வாங்க முயன்ற விஷயம் தெரியவந்து அவரின் தாய் கேட்கிறார். 

“ வீட்டின் பத்திரத்தை அடமானம் வைத்து 10 லட்சம் ரூபாய் யாருக்கு வாங்கி கொடுக்க போகிறாய்? ஆனந்திக்கு தானே? அந்த அளவிற்கு எப்படி உனக்கு தைரியம் வந்தது? “ என கோபமாக பேசுகிறார். சரியான நேரமாக அப்போது தான் ஜெயந்தி, சௌந்தர்யா, அன்பு வீட்டிற்கு நுழைக்கிறார்கள். இது தொடர்பான காட்சிகள் இன்றைய ( அக். 2 ) எபிசோடில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

நேற்றைய எபிசோட்

சிங்கப் பெண்ணே சீரியலின் நேற்றைய ( அக். 1 ) எபிசோட்டில், முத்து, அன்புவிடம் எதனால் வேலையை விட்டு செல்கிறார் என்று விசாரித்தார். அப்போது அவர் மகேஷ், ஆனந்தியை எந்த அளவிற்கு காதலிக்கிறார் என்பதை சொல்லி அழுகிறார். மேலும் ஆனந்தி பிரச்னையை அவரால் மட்டுமே தீர்க்க முடியும் என சொல்கிறார்.

காதல் தியாகம்

ஆனால் அதற்கு முத்து, ஆனந்தி காதலிப்பது அழகனை தான் மகேஷ் சாரை இல்லை, அதனால் காதலை தியாகம் செய்ய வேண்டும் என்று எண்ணத்தை விட்டுவிடு என்றார். மேலும் தான் அழகன் என்ற விஷயம் ஒரு போதும் ஆனந்தி உட்பட யாருக்கும் தெரிய கூடாது என முத்துவிடம் காட்டமாக சொல்லிவிட்டார். 

காயத்ரியிடம் வம்பு

காயத்ரியிடம் எப்போதும் வம்பு செய்யும் நபர் மீண்டும் வந்து உள்ளார். அவர் காயத்ரிக்கு போன் செய்து லோன் பணத்தை கொடுக்காமல் இரண்டு மாதமாக ஏமாற்றி வருகிறார் என கேட்டார். 

 ” இதை மட்டும் செய்தால் போதும், நீ கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்க வேண்டாம் “ என சொல்கிறார். இதனால் கடும் கோபம் அடைந்தார் காயத்ரி.  “ நீ எல்லாம் மனிஷனா? போனை கட் செய் “ என்றார். மேலும் என்ன நடந்தது என ஆனந்தி வந்து கேட்ட போது காயத்ரி நடந்த விஷயத்தை சொல்லாமல், நண்பரிடம் பேசி கொண்டு இருந்தேன் என்று சொல்லி சமாளித்துவிட்டு அங்கிருந்து சென்றார். 

தில்லை, மகேஷிடம், “ நீ எதற்காக, யாருக்காக இந்த லோன் பணத்தை வாங்கி கொடுத்தாய் என்று சொல்லும் வரை, நான் 1 ரூபாய் கூட கொடுக்க மாட்டேன் “ என்று காட்டமாக சொல்லினார். அதற்கு மகேஷ், “ நீங்க கொடுக்கவில்லை என்றால் அப்போ நான் வேறு கம்பெனிக்கு வேலைக்கு போக வேண்டியது தான் “ என்றார். இதை கேட்டு மித்ரா மட்டும் தில்லை அதிர்ச்சி அடைந்தார்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.