Singappenne Serial: மகேஷ் தந்தை கொடுத்த அதிர்ச்சி.. ஒன்றும் புரியாமல் சிக்கி தவிக்கும் ஆனந்தி
Singappenne Serial: சொந்த நிலம் மீட்க முடியாமல் இருக்கும் ஆனந்தியின் தந்தை வருத்தத்தில் தான் இருந்து இனிமேல் என்ன பயன் என்று கவலை கொள்கிறார்.
Singappenne Serial: சிங்கப்பெண்ணே சீரியலில் இருந்து இன்றைய ( செப் . 14 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில், ஆனந்தி வரும் விஷயம் தெரிந்து கொண்டு அவரை தடுக்த நிறுத்த வாசலில் காத்திருந்தார் மகேஷின் தாய். ஆனந்தி போனவுடன், மகேஷின் தந்தை தில்லை, “ நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும் ? என்று கேட்கிறார். அதை கேட்ட ஆனந்தி, “ சொல்லுங்க சார் நீங்க சொன்ன கேட்கிறேன் “ என்றாள். அதற்கு அவர், ” நீ மகேஷிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும் “ என சொல்கிறார். ஏன் இப்படி சொன்னார் என்று தெரியாமல் ஆனந்தி அதிர்ச்சி அடைந்தார்.
முன்பே எப்படி தெரிந்தது
மறுபக்கம் சொந்த நிலம் மீட்க முடியாமல் இருக்கும் ஆனந்தியின் தந்தை வருத்தத்தில் தான் இருந்து இனிமேல் என்ன பயன் என்று கவலை கொள்கிறார். இறுதியாக ஆனந்தி, வார்டனிடம் சென்று மகேஷ் தாய் மற்றும் தந்தை செய்த விஷயத்தை சொல்லினார். அதற்கு அவர், நீ பணம் கேட்டு சென்ற விஷயம் முன்பே எப்படி தெரிந்தது ? என கேட்டார்.
அத்துடன் இன்றைய ( செப் . 14 ) எபிசோட்டிற்கான ப்ரோமோ முடிவுக்கு வந்தது. மேலும் என்ன நடக்கும் என்பதை இரவு 9 மணிக்கு சன் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.
