Singappenne: நகைகளை திரும்ப கேட்ட அண்ணன்.. தாய் பாசத்தில் மகேஷ் - சிங்கப் பெண்ணே சீரியல்
Singappenne: ஆனந்தியின் அண்ணன் நகைகளை எடுத்துட்டு வந்த குற்ற உணர்வு காரணமாக தனது மனைவியிடம் சென்று, " ஆனந்தி இங்க சென்னையில் தான் இருக்கா. நீ போய் நகைகளை எடுத்துட்டு வா வாணி. நான் நகைகளை கொடுத்துட்டு அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு வரேன் " என்றார்.

Singappenne: சிங்கப் பெண்ணே சீரியலின் இன்றைய எபிசோட்டிருக்கான ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் மகேஷ் வார்டனிடம் சென்று," நீங்க அன்னைக்கு எனக்கு கையில ஆயின்மென்ட் போட்டுவிட்டு டின்னர் ஊட்டி விட்டப்போ. ஒரு அஞ்சு வயசு பையன் போல எனக்கு இருந்துச்சு. அந்த பீல் ரொம்ப புதுசா இருந்துச்சு" என்றார்.
நகைகளை திரும்ப கொடு
ஆனந்தியின் அண்ணன் நகைகளை எடுத்துட்டு வந்த குற்ற உணர்வு காரணமாக தனது மனைவியிடம் சென்று, " ஆனந்தி இங்க சென்னையில் தான் இருக்கா. நீ போய் நகைகளை எடுத்துட்டு வா வாணி. நான் நகைகளை கொடுத்துட்டு அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு வரேன் " என்றார்.
பரிசு கொடுத்த மகேஷ்
மறுபக்கம் ஹாஸ்டல் முன்பாக மகேஷ், ஆனந்தியை சந்திக்கிறார். ஆனந்தியிடம், " கிராமத்தில் இருக்கும் போது உனக்கு ஒரு கிப்ட் வாங்கி வச்சிருந்தேன். அப்ப கொடுக்க முடியல இப்ப வாங்கிக்கோ " என்று சொல்லி ஒரு பரிசை கொடுக்கிறார்.