Singappenne: மயக்கம் அடைந்த ஆனந்தி.. வெளிவரும் கர்ப்ப விஷயம் - சிங்கப்பெண்ணே சீரியல்-singappenne serial sun tv today episode promo on august 13 reveals anandhi faint - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singappenne: மயக்கம் அடைந்த ஆனந்தி.. வெளிவரும் கர்ப்ப விஷயம் - சிங்கப்பெண்ணே சீரியல்

Singappenne: மயக்கம் அடைந்த ஆனந்தி.. வெளிவரும் கர்ப்ப விஷயம் - சிங்கப்பெண்ணே சீரியல்

Aarthi Balaji HT Tamil
Aug 13, 2024 09:32 AM IST

Singappenne: கோலாகலமாக இந்த ஊருக்குள் வந்த ஆனந்தியை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று சதி திட்டம் வேலையில் இறங்கினார், சுயம்புலிங்கம்.

மயக்கம் அடைந்த ஆனந்தி.. வெளிவரும் கர்ப்ப விஷயம் - சிங்கப்பெண்ணே சீரியல்
மயக்கம் அடைந்த ஆனந்தி.. வெளிவரும் கர்ப்ப விஷயம் - சிங்கப்பெண்ணே சீரியல்

இன்றைய எபிசோட்

சாமியிடம் வைத்து பூஜை செய்த சாவியை, கோயில் பூசாரி ஆனந்தியின் தந்தையிடம் வீடு தேடி வந்து கொடுக்கிறார். ஆனால் அவர் அதை வாங்க மறுக்கிறார். இருப்பினும் அனைவரும் அவரை வாங்க சொல்லியதால் தயக்கத்துடன் அதை வாங்கி கொள்கிறார்.

கோலாகலமாக இந்த ஊருக்குள் வந்த ஆனந்தியை எப்படியாவது அழிக்க வேண்டும் என்று சதி திட்டம் வேலையில் இறங்கினார், சுயம்புலிங்கம். ஆனந்தி உட்பட அனைவரும் திருட்டு தனமாக இளநீர் குடிக்க தோட்டத்தை சேர்ந்தவர் விரட்டினார். அங்கிருந்து அனைவரும் ஓடி வர, ஆனந்தி மயக்கம் போட்டு அப்படியே சாய்வது போல் ப்ரோமோ முடிந்தது. 

இதன் மூலம் இன்றாவது அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற உண்மை தெரியவருகிறதா என்று பார்க்கலாம்.

நேற்றைய எபிசோட்

கதையின் நாயகி ஆனந்தியின் ஊரான சிவரக்கோட்டைக்கு, அவரது அலுவலகத்தைச் சேர்ந்தோர் எல்லோரும் அங்கு நடக்கும் கோயில் திருவிழாவுக்கு மொத்தமாக வேனில் புறப்படுகின்றனர். அதில் ஆனந்தி பணிபுரியும் இடத்தின் முதலாளி, சிவரக்கோட்டை ஊருக்குப் போவதே, ஆனந்தியின் பெற்றோரிடம் தான் ஆனந்தியைக் காதலிப்பதைச் சொல்லி, சம்மதம் பெறத்தான் என்று மனதுக்குள் நினைக்கிறார்.

சிவரக்கோட்டை பயணம் முடிவதற்குள், நான் தான் அழகன் என்று ஆனந்தியிடம் சொல்லப்போவதாக, அன்பு மனதுக்குள் நினைத்துவிடுகிறார்.

ஆடல், பாடல்

ஆனந்திக்கு ஊரில் சென்று இறங்கியதும் ஆடல், பாடல், வேட்டு வெடித்து, ஃபிளெக்ஸ் வைத்து பிரமாண்ட வரவேற்பு நடக்கிறது. அவரும் அந்த வரவேற்பில் கலந்துகொண்டு மாலையைப் பெற்றுக்கொண்டு டான்ஸ் ஆடுகிறார்.

பஞ்சம் பிழைக்க ஒத்த ஆளாக ஊரை விட்டு ஓடிட்டு, ஒரு கூட்டத்தையே திரட்டிட்டு வந்திருக்கியா என சிவரக்கோட்டையில் இருக்கும் வில்லன் சுயம்புலிங்கம் மனதுக்குள் கடுப்பாகிறார்.

பம்புசெட்டில் குளிக்க

மேலும் ’இந்த சுயம்புலிங்கத்தை மீறி, இந்த ஊர் எல்லையைத் தாண்ட முடியாது’ என்கிறார். ஆனந்தி, தன் அலுவலகப் பணியாளர்கள் அனைவரையும் வயல்வரப்பில் இருக்கும் பம்புசெட்டில் குளிக்க அழைத்துச் செல்கிறார். இது நகரத்தைச் சார்ந்த மித்ராவுக்கும் சிலருக்கும் பிடிக்கவில்லை.

பின், ஆனந்தி, அவர்களை வயல் வரப்பில், ஒருவர் முதுகை ஒருவர் பிடித்துக்கொண்டு நடந்தால், எளிதாக பம்பு செட் இருக்கும் இடத்திற்குச் சென்றுவிடலாம் என்கிறார். அதைத்தொடர்ந்து, அவரது முதலாளி, ஆனந்தியின் முதுகைப்பிடித்துக்கொண்டு வயல்வரப்பில் செல்கிறார். உடன் அனைவரும் செல்கின்றனர்.

பின், பம்பு செட்டில் வரும் நீரைப் பார்த்ததும் ஆனந்தி துள்ளிக் குதிக்கிறார். ஆனால், மித்ரா இந்த மாதிரியான அழுக்கு நீரில் எல்லாம் தன்னால் குளிக்க முடியாது என வாதிடுகிறார். பின் உள்ளே பம்புசெட் இருக்கும் நீரில் வழுக்கி விழுந்துவிடுகிறார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.