Singapenne Serial: கைமாறிய அதிகாரம்; ஆண்டியான அன்பு;மண்டியிட்ட மகேஷ்; எகிறும் கருணாகரன்- சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!-singapenne serial today promo episode on september 04 2024 indicates alagan warn anbu for rejecting ananthi - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singapenne Serial: கைமாறிய அதிகாரம்; ஆண்டியான அன்பு;மண்டியிட்ட மகேஷ்; எகிறும் கருணாகரன்- சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

Singapenne Serial: கைமாறிய அதிகாரம்; ஆண்டியான அன்பு;மண்டியிட்ட மகேஷ்; எகிறும் கருணாகரன்- சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

Kalyani Pandiyan S HT Tamil
Sep 04, 2024 07:59 AM IST

Singapenne Serial: “அதற்கு கருணாகரன் அந்த அதிகாரத்தை பிடுங்கி ஐந்து நிமிடங்கள் ஆகிவிட்டன என்று சொல்லி சிரித்தார். மேலும், மகேஷ் இனி இங்கே வரவே மாட்டார் என்றும் மித்ரா கூறினார். இதைக்கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து இருந்தனர்.” -சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

Singapenne Serial: கைமாறிய அதிகாரம்; ஆண்டியான அன்பு;மண்டியிட்ட மகேஷ்; எகிறும் கருணாகரன்- சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
Singapenne Serial: கைமாறிய அதிகாரம்; ஆண்டியான அன்பு;மண்டியிட்ட மகேஷ்; எகிறும் கருணாகரன்- சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

மேலும், மகேஷ் இனி கம்பெனியை நிர்வகிக்க வேண்டாம் என்றும் கூறினார். இதனால் சந்தோஷம் அடைந்த கருணாகரன் மற்றும் மித்ரா அன்புவிடம் வந்து சண்டை இட்டார்கள். இதை பார்த்த அன்பு உங்களுக்கு இருக்கும் அதே அதிகாரம், எனக்கும் இந்த கம்பெனியில் இருக்கிறது மறந்துவிட வேண்டாம் என்று எச்சரித்தான். ஆனால் அதற்கு கருணாகரன் அந்த அதிகாரத்தை பிடுங்கி ஐந்து நிமிடங்கள் ஆகிவிட்டன என்று சொல்லி சிரித்தார். மேலும், மகேஷ் இனி இங்கே வரவே மாட்டார் என்றும் மித்ரா கூறினார். இதைக்கேட்ட அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து இருந்தனர்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன?

நேற்றைய எபிசோடில் மகேஷ் ஆனந்தியை காதலிப்பதை தெரிந்து கொண்ட அன்பு, வேறு வழியில்லாமல் ஆனந்தியை விட்டுக் கொடுக்க முடிவு செய்துவிட்டான். தொடர்ந்து அவளின் நினைவுகளாக தனக்கு வந்த பரிசுகளை பார்த்து, அறையில் அழுது கொண்டிருந்தான்.

இந்த நிலையில், திடீரென்று தோன்றிய அவனின் மனசாட்சியான அழகன், ஆனந்தியை எப்படி உனக்கு விட்டுக் கொடுக்க மனம் வந்தது, அதுவும் இல்லாமல் என்னை கேட்காமல் நீ எப்படி ஆனந்தியை மகேஷுக்கு விட்டுக் கொடுப்பாய், ஆனந்தி மகேசை கல்யாணம் செய்து கொண்டால், செல்வ செழிப்புடன் நன்றாக வாழ்வாளே என்று நீ நினைக்கலாம்.

ஆனந்தி காதலிப்பது யாரை?

ஆனால், ஆனந்தி உண்மையில் காதலிப்பது எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அழகைதான். முதலில் ஆனந்தியிடம் உன்னுடைய காதலை சொல். அவள் அதற்கு என்ன மாதிரியான பதிலை கொடுக்கிறாள் என்பதை பார். அந்த பதிலை பொறுத்து நீ முடிவெடு என்று சொல்லி மறைந்தது. இந்த நிலையில் திடீரென்று ஆனந்தி அன்பிற்கு ஃபோன் செய்தாள். அதை எடுத்த பொழுது ஆனந்தி அன்புவிடம் மிகவும் பரிவாக வீட்டிற்கு சென்று விட்டீர்களா? உங்கள் ஞாபகமாகவே இருக்கிறது என்றாள். இதைக் கேட்டு அவன் சந்தோஷம் அடைந்தான். அதன் பின்னர் ஆனந்தியிடம் தன்னுடைய காதலை சொல்லிவிடலாம் என்று முடிவெடுத்த அவன், காதலில் உருகி நின்றான்.

அடுத்த நாள் காலையில் ஆனந்தியின் சைக்கிள் பஞ்சர் ஆக ஆனந்தியும், அன்புவும் ஒன்றாக பைக்கில் வந்தனர். இதைப்பார்த்த அவனது நண்பன், ஆனந்தியிடம் காதலை சொல்லிவிட்டாயா என்று கேட்டான். அதற்கு திருதிருவென்று அன்பு முழித்துக் கொண்டிருந்தான். இதற்கிடையே மித்ராவும் கருணாகரனும் எப்படியாவது மகேஷின் அப்பாவான தில்லையின் மனதை மாற்றி, கம்பெனியின் முழு பொறுப்பையும் நம் கண்ட்ரோலில் கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டனர். அதற்கு ஏற்றபடி தில்லையும் அனைவரையும் மீட்டிங்கிற்கு அழைத்திருக்கிறார்

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.