Singapenne Serial: ஆனந்தி வயிற்றில் கரு..திண்டாடும் அன்பு.. தெரியாமல் ரூட் விடும் மகேஷ்! - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று-singapenne serial today episode on september 02 2024 indicates anandhi asks who is azhagan to anbu - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singapenne Serial: ஆனந்தி வயிற்றில் கரு..திண்டாடும் அன்பு.. தெரியாமல் ரூட் விடும் மகேஷ்! - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று

Singapenne Serial: ஆனந்தி வயிற்றில் கரு..திண்டாடும் அன்பு.. தெரியாமல் ரூட் விடும் மகேஷ்! - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று

Kalyani Pandiyan S HT Tamil
Sep 02, 2024 08:08 AM IST

Singapenne Serial: இவ்வளவு நாளும் நான் கோயில் நகையை அவ்வளவு கட்டுக்கோப்பாக பாதுகாத்து வந்தேன். ஆனால் அதைப் பற்றி எல்லாம் நீங்கள் யோசிக்காமல் வீண் பழியை என் மீது சுமத்தி, எனது கௌரவத்திற்கு களங்கம் விளைவித்து விட்டீர்கள் - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!

Singapenne Serial: ஆனந்தி வயிற்றில் கரு..திண்டாடும் அன்பு.. தெரியாமல் ரூட் விடும் மகேஷ்! - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று
Singapenne Serial: ஆனந்தி வயிற்றில் கரு..திண்டாடும் அன்பு.. தெரியாமல் ரூட் விடும் மகேஷ்! - சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று

இதற்கிடையே ஆனந்தி சென்னைக்கு திரும்பியதிலிருந்து, ஒரு மாதிரியே இருக்கிறார் என்று சந்தேகப்படும் சக தோழிகள் என்ன நடந்திருக்கும் என்று யோசிக்கிறார்கள். இன்னொரு பக்கம் அன்பு விடம் ஆனந்தி அழகன் யார் என்ற விஷயம் உங்களுக்கு தெரியும் என்று கூறினீர்களே, சொல்ல முடியுமா என்று கேட்கிறாள். இது தொடர்பான நிகழ்வுகள் இன்றைய சீரியலில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்

 

மன்னிப்பா

நேற்றைய எபிசோடில், ஆனந்தி காணாமல் போன நகைகளை கண்டுபிடித்து பஞ்சாயத்து முன்னால் கொண்டு வைத்தாள். இதையடுத்து பஞ்சாயத்து தரப்பாக பேசிய பூசாரி, ஆனந்தியின் அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார். தொடர்ந்து அவர் இந்த பிரச்சினையை இத்தோடு விடுங்கள் என்றும் கூறினார். அப்போது உள்ளே வந்த ஆனந்தியின் அம்மா, அது எப்படி ஊர் முன்னால் வைத்து எங்களை அவமானப்படுத்தி விட்டு, இப்போது ஒரு வார்த்தையில் மன்னிப்பு கேட்டு, பிரச்சினையை முடிக்க சொல்கிறீர்கள். நாங்கள் எவ்வளவு சொன்னோம். நாங்கள் நகையை எடுக்கவில்லை என்று..யாராவது எங்களை நம்பினீர்களா? என்றார். 

இதற்கிடையே பேசிய ஆனந்தியின் அப்பா, இவ்வளவு நாட்கள் கோயில் பாதுகாப்பு சார்ந்த பணிகளில் இருக்கிறேன். என்றாவது என் மீது இப்படியான ஒரு புகார் வந்திருக்கிறதா? இவ்வளவு நாளும் நான் கோயில் நகையை அவ்வளவு கட்டுக்கோப்பாக பாதுகாத்து வந்தேன். ஆனால் அதைப் பற்றி எல்லாம் நீங்கள் யோசிக்காமல் வீண் பழியை என் மீது சுமத்தி, எனது கௌரவத்திற்கு களங்கம் விளைவித்து விட்டீர்கள். அப்படி ஒரு சம்பவத்தை செய்து விட்டு மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தையில், இதை எப்படி நீங்கள் முடிக்க முடியும் என்று சண்டைக்குச் சென்றார். 

இதையடுத்து பேசிய பூசாரி, நடந்தது நடந்து விட்டது விடு என்றார். ஆனால், அப்போது உள்ளே புகுந்த ஆனந்தி, அது எப்படி விட முடியும், இவ்வளவு பிரச்சினைக்கு காரணமான ஊர் தலைவர் சொக்கலிங்கம் அப்பாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அப்போதுதான் நாங்கள் இதை விடுவோம் என்றாள். இதையடுத்து பேசிய ஊர் பெரியார், காணாமல் போன நகையானது மிகவும் குறைவான நேரத்தில் மீட்கப்பட்டிருக்கிறது. அது எப்படி என்று எங்களுக்கு இப்போது வரை தெரியவில்லை. ஒருவேளை இது நீங்கள் நடத்திய நாடகமாக கூட இருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது ஊர் தலைவர் எதற்கு உங்கள் முன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டார். 

சாட்சியம் வைத்த ட்விஸ்ட்

இதை எடுத்து அதற்கான சாட்சியத்தை நான் காண்பிக்கிறேன் என்று சொல்லி, திருடர்களுக்கு வைத்தியம் பார்த்த வைத்தியரை அழைத்து வந்து சாட்சி சொல்ல வைத்தாள் ஆனந்தி. இதனால், ஊர் பெரியவர்களும் சொக்கலிங்கமும் எதுவும் பேச முடியாமல் நின்றனர். மேலும் பேசிய ஆனந்தி சொக்கலிங்கம் இப்போது மன்னிப்பு கேட்கவில்லை என்றால், நாங்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கிறோம். நீதிமன்றத்தில் வழக்கு நடக்கட்டும் என்றாள். இதையடுத்து பேசிய பூசாரி ஒரு முறை பஞ்சாயத்தை மீறி சம்பவம், நீதிமன்றத்திற்கு சென்று விட்டால், ஊரின் கட்டுப்பாடு உடைந்து விடும். ஆகையால் சொக்கலிங்கத்தை மன்னிப்பு கேட்கச் சொன்னார் பூசாரி. இதையடுத்து வேறு வழியில்லாமல் சொக்கலிங்கம், ஆனந்தியின் அப்பாவிடம் மன்னிப்பு கேட்டார்

எல்லோரும் சென்ற பின்னர் வைத்தியர் ஆனந்திக்கு வயிற்றில் கரு இருப்பதை நினைத்து வருத்தப்படுகிறார். இதை எப்படி இவர்கள் சமாளிக்க போகிறார்கள் என்று பயப்படுகிறார். இன்னொரு பக்கம் அன்பு ஆனந்தியிடம் காதலை சொல்ல முடியவில்லை என்று தவித்துக் கொண்டிருக்க, மற்றொரு பக்கம் மகேஷ் தன்னுடைய ஆனந்தியின் மீதான காதலை சிதம்பரத்திடம் சொல்வதற்கு தயாரானான்” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.