Singapenne Serial: மகேஷ் சொன்ன ஒரு வார்த்தை.. உடைந்து போன அன்புவின் காதல் - இனி என்ன நடக்குமோ?-singapenne serial today august 30 indacates mahesh open his love - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Singapenne Serial: மகேஷ் சொன்ன ஒரு வார்த்தை.. உடைந்து போன அன்புவின் காதல் - இனி என்ன நடக்குமோ?

Singapenne Serial: மகேஷ் சொன்ன ஒரு வார்த்தை.. உடைந்து போன அன்புவின் காதல் - இனி என்ன நடக்குமோ?

Aarthi Balaji HT Tamil
Aug 30, 2024 11:02 AM IST

கோயில் நகைகள் திருடு போனதற்கு முழு பழியும் ஆனந்தி மற்றும் அவரது தந்தை மீது விழுந்திருக்கிறது. எப்படியாவது தங்கள் மேல் விழுந்த கலங்கத்தை போக்க வேண்டும் என்று முனைப்பில் இருக்கிறார் ஆனந்தி.

Singapenne Serial: மகேஷ் சொன்ன ஒரு வார்த்தை.. உடைந்து போன அன்புவின் காதல் - இனி என்ன நடக்குமோ?
Singapenne Serial: மகேஷ் சொன்ன ஒரு வார்த்தை.. உடைந்து போன அன்புவின் காதல் - இனி என்ன நடக்குமோ?

முதலில், ஆனந்தியை காணவில்லை என்பதால் அன்பு மற்றும் மகேஷ் காட்டு பக்கம் அவரை தேடிச் சென்றார். அந்த மூன்று திருடர்களுடன் சண்டையிடும் போது ஒருவர் மட்டும் ஆனந்தியை உயிருடன் புதைத்து இருப்பதை அன்பு விடம் சொல்லிவிட்டார். உடனே இந்த விஷயத்தை அன்பு ஓடிச் சென்று மகேஷிடம் கூறினார். அவர் அதிர்ச்சி அடைந்தார்.

ஆனந்தியின் அதிரடி

இதை சற்றும் எதிர்பார்க்காத மகேஷ், ஆதங்கத்தில் தான் காதலிக்கும் பெண் வேறு யாருமில்லை ஆனந்தி தான் என்பதை முதல் முறையாக அன்பு விடம் சொல்லி கதறுகிறார். ஏற்கனவே அன்பு, அழகன் என்ற பெயரில் ஆனந்தியை தீவிரமாக காதலிப்பதால் அதிர்ச்சி அடைந்து நிற்பது போல் ப்ரோமொ முடிந்தது. மீதம் என்ன நடக்கும் என்பதை இன்றைய முழு எபிசோட்டில் பார்ம்த்து தெரிந்து கொள்வோம்.

கோயில் நகைகள் திருடு போனதற்கு முழு பழியும் ஆனந்தி மற்றும் அவரது தந்தை மீது விழுந்திருக்கிறது. எப்படியாவது தங்கள் மேல் விழுந்த கலங்கத்தை போக்க வேண்டும் என்று முனைப்பில் இருக்கிறார் ஆனந்தி.

நேற்றைய எபிசோட்

அதற்கு ஏற்றார் போல் அந்த ரவுடி கும்பலை சேர்ந்த ஒருவருக்கு பாம்பு கடித்து நாட்டு மருந்து வைத்தியம் பார்க்க ஊருக்குள் வந்தனர். வைத்தியம் பார்த்துக் கொண்டே இருந்தபோது கூட்டாளி ஒருவர் எதற்கு அவனை ஊருக்குள் அழைத்து வந்தாய் என கேட்டு பாதி வைத்தியத்திலேயே அழைத்து சென்று விட்டார்.

இதனால் சிட்டுக்கு சந்தேகம் வந்து நடந்த அனைத்தையும் ஆனந்தியிடம் சென்று கூறிவிட்டார். ஆனந்தி அவர்களை தேடி காட்டுப்பக்கம் சென்றாள். அப்போது அவர்கள் நகை வைத்திருப்பது பார்த்து மண்ணு கட்டி நகைகளை பறித்து விட்டார். 

அப்போது அவ்வழியாக வந்த பஞ்சாயத்து தலைவர் சுயம்புலிங்கம் ஆனந்தி மண்டையில் கட்டையால் அடித்து மயக்கம் அடைய செய்தார். மேலும் அவர் உயிருடன் இருந்தால் தனக்கு தான் ஆபத்து என்று உயிருடன் புதைக்குமாறு அந்த திருடர்களிடம் கட்டளையிட்டார்.

மகேஷ் மீது திடீரென்று அன்பைப் பொழிந்த சதிலீலாவதி

இன்னொரு பக்கம் தான் தான் அழகன் என்பதைக் கூறி, தன்னுடைய காதலை வெளிப்படுத்த தயாராக இருந்த அன்பும், அந்த முடிவை தற்சமயமாக கைவிடுகிறான். இதற்கிடையே மகேஷ் மீது திடீரென்று அன்பைப் பொழிந்த சதிலீலாவதி, தான் ஏன் இப்படி நடந்து கொண்டேன் என்பதில் பதற்றம் அடைந்து, உடனே இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று முடிவு எடுத்து அங்கிருந்து கிளம்புகிறேன்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.