Actress Shalini: ‘அப்பா இல்லாத பெண்கள் தான் டார்க்கெட்.. எனக்கு தெரிந்து 4 பேர்..’ உடைத்து பேசும் நடிகை ஷாலினி!
அப்பா இல்லாத பெண்களாக பார்த்து ஏமாற்றி, அவர்களை அடைந்திருக்கிறார். எனக்கு கண்ணுக்கு தெரிந்து 4 பேர் அவருடன் தொடர்பில் இருக்கிறார்கள்.
சமீபத்தில் முள்ளும் மலரும் சீரியல் நடிகை ஷாலினி, விவாகரத்து தொடர்பான போட்டோ ஷூட் நடத்தி அனைவரின் கவனத்தை ஈர்த்தார் . இந்நிலையில் பிரபல யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டி இதோ:
‘‘2012-13ல் நான் நடித்துக் கொண்டு தான் இருந்தேன். முதலில் சினிமா அப்புறம் தொலைக்காட்சி என என் நடிப்பு பயணம் சென்றது. அந்த காலகட்டத்தில் மேட்ரிமொனியில் பார்த்து எனக்கு வீட்டில் திருமணம் செய்து வைத்தார்கள். 3 மாதத்தில் அந்த உறவு முறிந்துவிட்டது. அதைப்பற்றி பேச வேண்டாம். நான் தொடர்ந்து மீடியாவில் தான் இருந்தேன். 2016ல் ஜோடி நம்பர் 1 ஷோ பண்ணேன்.
அந்த நேரத்தில் துபாயில் ஒரு ஷோக்கு அழைத்தார்கள். அங்கு ரியாஸ் என்பவரை சந்தித்தேன். என் ரசிகர் என என்னிடம் அறிமுகம் செய்து கொண்டார். அதன் பின் பழகிய பின், தன் மனைவி பிரிந்து அவரது வீட்டில் இருப்பதாகவும், தான் தனிமையில் இருப்பதாக என்னிடம் வருத்தமாக தெரிவித்தார். அப்போது சிங்கிளாக நான் நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்தேன். இதற்கிடையில் எங்களுக்குள் நட்பு, காதலாக மாறியது.
‘லிவ்விங் டுகெதர்’ முறையில் இருக்கலாம் என ரியாஸ் என்னிடம் கூறினார். ‘எங்கள் வீட்டில் அதற்கு ஓப்புக்கொள்ள மாட்டார்கள், எங்கள் வீட்டில் வந்து பேசுங்கள்’ என்று கூறினேன். அவர் முஸ்லீம் தான். நான் கூறியதால், திருவேற்காட்டில் சிறிதாக இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டோம். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் கர்ப்பமானேன்.
கர்ப்பமாகும் முன்பே, என்னை கொடுமைப்படுத்த தொடங்கினார். அதற்கான காரணம் எல்லாம் சைக்கோ தனமாக இருக்கும். போனை தவறவிட்டு, ஒருவர் அதை எடுத்து வந்து தரும் போது, அவருக்கு நன்றி கூறினால் இரண்டு நாட்கள் என்னை அடிப்பார்.
இங்கே வரும் போதே, எந்தந்த பப் போக வேண்டும் என்று திட்டமிட்டு வருவார். குடித்தால் அவர் குணம் மாறும் என்பதால் அதெல்லாம் வேண்டாம், ரிசார்ட் மாதிரி இடங்களுக்கு போகலாம் என்பேன். அதை கேட்மாட்டார். நாம் போகும் இடங்களில் கதவை திறந்து விடுபவர்கள் நமக்கு வணக்கம் சொன்னால், ‘அவர்களிடத்தில் என்னை ஏன் அறிமுகம் செய்யவில்லை?’ என்று கேட்பார். எல்லார் முன்னிலையிலும் என் காலில் விழ வேண்டும் என்றார். வேறு வழியில்லாமல் நானும் காலில் விழுந்தேன்.
நான் கார் ஓட்டினால், ‘ஒரு பெண் ஓட்டி நான் உட்கார வேண்டுமா’ எனறு அடிப்பார். டிரைவர் வைத்து அழைத்துச் சென்றால், டிரைவர் இருக்கும் போது என்னை கடுமையான கெட்ட வார்த்தையால் திட்டுவார். துபாயில் இருந்த போது மது குடிக்க என்னை அழைப்பார். எனக்கு எப்போதாவது குடிக்கம் பழக்கம் இருந்தது. ஆனால், அந்த நேரத்தில் குழந்தை பிறப்பதற்காக சிகிச்சையில் இருந்தால் மறுத்தேன். கட்டாயப்படுத்தி என்னை குடிக்க வைத்தரர்.
உறங்கும் போது தண்ணீர் ஊற்றி, நீ மட்டும் ஏன் தூங்குற? என்று கேட்பான். அடித்து ரத்தம் வந்தால், ‘ரத்தம் வர்ற மாதிரி என்னை அடிக்க வெச்சிட்டீயே?’ என்று அதற்காக என்னை அடித்தார். குழந்தை பிறப்பதற்கு முன் அடித்தது வேறு. குழந்தை பிறந்த பின் அவள் முன்னால் அடித்த போது, என் குழந்தை பயந்தாள். குழந்தையை என் அம்மாவிடம் அனுப்பிவிட்டு, அவரை திருப்பி அடித்தேன்.
அதன் பிறகு தான் கும்பகோணத்தில் அவரது மனைவி இருப்பது தெரியவந்தது. அவரை தலாக் வாங்கியதாக கூறியிருந்தார். ஆனால் வாங்கவில்லை. ஒரு நாள் முதல் மனைவியுடன் பிரச்னை என்று அழைத்தார். நான் கும்பகோணம் போனால், அங்கு ஏதோ இடத்தில் வைத்து பஞ்சாயத்து பேசினார்கள். ரியாஸ் பயங்கர மது போதையில் இருந்தார். அவர் அம்மா, என் குழந்தையை தன் மகனின் குழந்தை இல்லை என்று, குழந்தையை தாக்க வந்தார். உள்ளே இருந்து ரியாஸ் அதை கண்டுகொள்ளவில்லை. அதன் பின் போலீசில் புகார் கொடுத்து பிரச்னை ஆகி, என்னையும், குழந்தையும் விட மாட்டேன் என எழுதி கொடுத்தார்.
அதன் பின் சில பெண்களுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டு, என்னையும், என் குழந்தையையும் கண்டுகொள்ளவில்லை. 2010ல் இருந்து வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். அப்போ இவருக்கு கல்யாணம் ஆகவில்லை. அப்பா இல்லாத பெண்களாக பார்த்து ஏமாற்றி, அவர்களை அடைந்திருக்கிறார். எனக்கு கண்ணுக்கு தெரிந்து 4 பேர் அவருடன் தொடர்பில் இருக்கிறார்கள்.
என்னை பொருத்துவரை, எனக்கும், என் குழந்தைக்கும் பாதுகாப்பு வேண்டும். இனிமேல் இந்த மாதிரி ஆளுங்க, மற்றவர்களை ஏமாற்றுவதை நான் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. முதல் மனைவி இருக்கும் நபரை யாரும் கல்யாணம் பண்ணாதீங்க. விவாகரத்து பண்ணிட்டாங்களா என்பதை தெளிவாக தெரிந்த பின் திருமணம் செய்து கொள்ளளுங்கள்,’’
என்று அந்த பேட்டியில் ஷாலினி தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்