‘திருமணம் ஆனதால் போக முடியல’ கவுதமி வேம்புநாதன் வேதனை!
Gowthami Vembunathan:பள்ளி காலத்தில் முழுமையாக நான் விளையாட்டு துறையில் தான் அதிக கவனம் செலுத்தினேன். நடிப்பு வரும் எண்ணமோ, வாய்ப்போ அப்போது இல்லை. திருமணத்திற்கு பிறகு தான் நடிக்க வந்தேன்.
20 ஆண்டுகளாக சீரியல், சினிமா என வில்லி, காமெடி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கவுதமி வேம்புநாதன். பிரபல தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார். இதோ அந்த பேட்டி:
‘‘நான் நடிப்புக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. சன்டிவியில் நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ் மூலம் நிம்மதியா உள்ளே வந்தேன். அப்புறம், மாயாவி மாரிச்சன், சூலம் என தொடர்ந்து கொண்டே போனது. முதல் மெகா சீரியலான ஆலயம் சீரியலில், பெரிய கதாபாத்திரம் கிடைத்தது.
இந்த 20 வருடத்தில், கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் சன்டிவியில் தான் பணியாற்றினேன். நான் 800 மீட்டர் ரிலே ரன்னர். மாவட்ட அளவில் போனேன், அதற்கு மேல் போக முடியவில்லை, அதுக்கு அப்புறம் பயிற்சிக்கு போகவில்லை, திருமணமும் ஆகிவிட்டதால், அதில் போக முடியவில்லை.
பள்ளி காலத்தில் முழுமையாக நான் விளையாட்டு துறையில் தான் அதிக கவனம் செலுத்தினேன். நடிப்பு வரும் எண்ணமோ, வாய்ப்போ அப்போது இல்லை. திருமணத்திற்கு பிறகு தான் நடிக்க வந்தேன். என் அப்பா அமெச்சூர் நடிகர். அவருக்கு ஒரு சீரியல் வாய்ப்பு வந்த போது, என்னை அழைத்தார்கள். ‘சரி பண்ணலாமே’ என முயற்சி பண்ணேன். பின்னர் அதுவே தொழிலாகிவிட்டது.
எந்த ரோல் கொடுத்தாலும் நடிக்க வேண்டும் என்பது தான் என் எண்ணம். ஆனால், எனக்கு வருவது வில்லி ரோல் தான். வில்லியாக மாநில விருது வாங்கும் அளவிற்கு வில்லியாகிவிட்டேன். என் கதாபாத்திரங்களை பார்த்து, என்னிடம் பேசவே ஷூட்டிங்கில் பயப்படுவார்கள். பேசிய பிறகு தான், ‘இவ்வளவு அமைதியானவங்களா?’ என்று கேட்பாங்க.
நான் ஒரு ஸ்டேஜ் ஆர்டிஸ்ட் என்றாலும் சீரியலில் வரும் போது, அது மொத்தமாகவே வேறு மாதிரி இருந்தது. நகரம் படத்தில் வடிவேலு சாருடன் நடித்தது நல்ல அனுபவம். வாடகை மாமியாக அந்த கதாபாத்திரம், நடிக்கும் போது எனக்கு பேசப்படும் என தெரியவில்லை.
ஆனால், பேசப்படும் என சுந்தர் சி சார் அப்பவே உறுதியா சொன்னார்.
டாபிக்ஸ்