'செக்ஸ்க்காக மட்டும் கல்யாணம் பண்ணிக்கல.. ஊர் வாயவும் அடைக்க முடியல' 40 வயதுக்கு மேல் 2ம் திருமணம் செய்த நடிகை..
கேரள சீரியல் நடிகையான திவ்யா ஸ்ரீதர் 40 வயதுக்கு மேல் 2ம் திருமணம் செய்த நிலையில் பலரது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார்.

மலையாள சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் திவ்யா ஸ்ரீதர். இவர், தன்னுடன் பத்தரைமாற்று எனும் சீரியலில் நடித்த வேணுகோபால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இது திவ்யா ஸ்ரீதருக்கு இரண்டாம் திருமணம். இதனால், பலரும் 40 வயதிற்கு பிறகும் அப்படி என்ன தேவை இருக்கிறது என கேள்வி எழுப்பி அவரை காயப்படுத்தி வந்தனர்.
வாழ்க்கையில் சில தேவைகள் இருக்கு
இந்நிலையில், தான் திருமணம் செய்துகொண்டதற்கான காரணம் குறித்து மக்கள் முன் விளக்கியுள்ளார். நான் என்னுடன் பத்திரைமாற்று சீரியலில் நடித்த வேணுகோபால் என்பவரை, படப்பிடிப்பு சமயத்தில் சந்தித்தேன். அப்போது, அவருடன் ஏற்பட்ட நட்பு எங்களுக்குள் நல்ல புரிதலைக் கொடுத்தது. இதையடுத்து இருவரும் எங்கள் வாழ்வின் தேவைகளைக் கருத்தில் கொண்டு திருமணம் செய்துகொண்டோம் எனக் கூறினார்.
எல்லோருக்கும் சொல்ல ஆசைதான்.. ஆனா
எங்கள் திருமணத்தை 4 பேருக்கு அறிவித்து செய்ய வேண்டும் என்று தான் திட்டமிட்டோம். ஆனால், இங்கு எங்களை வாழ்த்துபவர்களை விட விமர்சிப்பவர்களே அதிகமாக இருந்தனர். அதனால், நாங்கள் எங்களுக்கு வேண்டியவர்களை மட்டும் அழைத்து திருமணம் செய்தோம் எனத் தெரிவித்தார்.