Tamil Movies On This Day: கமல் தவறவிட்ட வாய்ப்பு.. ரஜினிக்கு கை கொடுக்காத 100வது படம்.. செப். 1 இல் ரிலீஸான படங்கள்
Tamil Movies On This Day: செப்டம்பர் 1 ஆம் தேதியில் தமிழ் ரசிகர்கள் மனம் கவர்ந்த சில படங்கள் வெளியாகி உள்ளது. அதன் தொகுப்பினை பார்ப்போம்.

Tamil Movies On This Day: கமல் தவறவிட்ட வாய்ப்பு.. ரஜினிக்கு கை கொடுக்காத 100வது படம்.. செப். 1 இல் ரிலீஸான படங்கள்
Tamil Movies On This Day: பாரதி
சாயாஜி ஷிண்டே, தேவயானி, நிழல்கள் ரவி நடித்த சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட 2000 ஆம் ஆண்டு வெளியானது, பாரதி. இத்திரைப்படத்தை ஓய்வு பெற்ற கலெக்டர் ஞான ராஜசேகரன் இயக்கினார்.
2000 ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது. வ. உ. சிதம்பரம்பிள்ளை, வீரபாண்டிய கட்டபொம்மன் என சுதந்திர போராட்டத் தியாகிகள் பற்றி படம் வந்திருந்தாலும், எழுத்தின் மூலம் சுதந்திர வேட்கையை ஏற்படுத்திய முண்டாசுக் கவியின் வாழ்க்கை வரலாறை எடுப்பதற்கு மட்டும் கால தாமதம் ஆகிவந்தது.
அந்தக் குறையை இயக்குநர் ஞான ராஜசேகரன் பூர்த்தி செய்து வைத்தார்.