Seetha Raman: ஒரே இளநீரில் ரெண்டு ஸ்ட்ரா.. ராமுடன் சீதா ரொமான்ஸ், டென்ஷனில் மகா குடும்பம்
சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.
இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராம் மற்றும் சீதா என இருவரும் மகாபலிபுரம் கிளம்பிய நிலையில் இங்கே வீட்டில் ராமை எப்படி திரும்ப வர வைப்பது என மகாலட்சுமி யோசிக்கிறாள்.
ஜீப்பில் ராமுடன் செல்லும் சீதா அவனிடம் பேச தொடங்குகிறாள்.நான் பேசுனா தான் நீங்க பேசுவீங்களா பாஸ், இல்லனா பேச மாட்டிங்களா பாஸ் என கேட்க ராம் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என சொல்கிறான். பிறகு சீதா நான் ஜீப் ஒட்டாவா என கேட்க ராம் உனக்கு ஓட்ட தெரியுமா என கேட்க அவள் நான் 10-வது படிக்கும் போதே ஓட்ட கத்துக்கிட்டேன் என சொல்கிறாள்.
பிறகு ஜீப்பை வேகமாக ஒட்டி ராமை மிரள வைக்கிறாள். இதற்கிடையில் மகாலட்சுமி, அர்ச்சனா என வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் தொடர்ந்து போன் செய்து கொண்டே இருக்க சீதா இருவரது போனையும் சுவிட்ச் ஆப் செய்து விடுகிறாள். இதனால் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் டென்ஷனாக மீராவும் துரையும் அவங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டி தானே, அவங்க வெளிய போகுறதுல உங்களுக்கு என்ன கவலை என கேட்க ராமின் தங்கைகள் ஓவராக பேச மீரா அவர்களை திட்டுகிறாள்.
அடுத்து சீதா நீங்க உங்க சித்தி சொன்னா மட்டும் தான் கேப்பீங்களா? என கேட்க அவன் நீ சொன்னாலும் கேட்பேன் என்று சொல்கிறான். உடனே சீதா அப்படினா ஜீப்பை அந்த மரத்தின் மீது மோதுங்க என சொல்ல ராம் வேகமாக மோத போக சீதா பயந்து அவனை கட்டி கொள்கிறாள். நீ இல்லனா கண்டிப்பா மோதி இருப்பேன் என ராம் சொல்ல சீதா சாந்தோஷமடைகிறாள்.
அடுத்து சீதா தனக்கு பூ வேண்டும் என சொல்லி ஒரு பூக்கடை அருகே நிறுத்தி பூ வாங்கி தலையில் வைத்து விட சொல்ல ராமும் வைத்து விடுகிறான். இதை பூக்கார பெண்ணை வைத்து போட்டோ எடுத்து வீட்டில் எல்லாருக்கும் அனுப்புகிறாள் சீதா.
அதோடு இல்லாமல் இளநீர் ஒன்று வாங்கி இருவரும் ஒரே இளநீரில் ஸ்ட்ரா போட்டு குடிப்பதையும் போட்டோ எடுத்து அனைவர்க்கும் அனுப்ப இதை பார்த்து எல்லாரும் டென்ஷன் ஆகின்றனர்.சீதா அனுப்பிய போட்டோக்களை மகா பார்த்தால் என்ன ஆகும் என பயப்படுகின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.