Seetha Raman : சீதாவுக்கு ஷாக் கொடுத்த மதுமிதா.. மகா விட்ட சவால்!
சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து இங்கு பார்ப்போம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.
இந்த சீரியலில் மகா ராமிடம் நீ IPS ஆக கூடாது என சொல்லியிருந்த நிலையில் ராம் வருத்தப்பட சீதா ஆறுதல் சொல்ல தொடங்கிய நிலையில் இன்றைய எபிசோடில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க .
அதாவது ராம் சித்திக்கு பிடிக்காத விசயங்களை செய்ய கூடாது என வருத்தப்பட சீதா நான் உங்க அம்மாவோட இடத்தில் இருந்து உங்க ஆசையை நிறைவேற்றுவேன் என வாக்கு கொடுக்க வெளியில் இருந்து இதை கேட்டு மகா அதிர்ச்சி அடைகிறாள்.
அதன் பிறகு மகா தன்னுடைய ரூமில் கேங்கிடம் மதுவை சென்னைக்கு வர வைத்து சீதாவுக்கு முடிவு கட்ட போறேன் என திட்டங்களை சொல்ல இதை சீதா கேட்டு விடுகிறாள். இதனையடுத்து சீதா மதுவுக்கு போன் செய்து நீ சென்னைக்கு வராதே, மகா நல்லவள் கிடையாது என சொல்ல மது நீ அப்பா சொல்லி தானே இப்படியெல்லாம் பண்ணிட்டு இருக்க என திட்டி போனை வைக்கிறாள். இதனால் சீதா என்ன செய்வது என தெரியாமல் குழம்புகிறாள்.
இதனையடுத்து மதுவின் அண்ணி நீ சீதா கிட்ட பேசாத, அவ நம்பரை பிளாக் பண்ணு என ஏத்தி விட மதுமிதா மகாவுக்கு போன் செய்து சீதா தன்னை தடுக்க முயற்சி செய்யும் விசியத்தை சொல்கிறாள். இதனால் கோபமாகவும் மகா சீதாவை திட்டி மதுவை சென்னைக்கு வர வைத்து இந்த வீட்டுக்கு கொண்டு வருவேன் என சவால் விடுகிறாள். பதிலுக்கு சீதா நீங்க நினைக்கிறது எதுவும் நடக்காது எனவும் சவால் விடுகிறாள்.
இறுதியாக மீராவும் துரையும் சீதாவிடம் நீ எல்லா விசயத்தையும் உங்க அப்பா கிட்ட சொல்லிடு என சொல்ல சீதா அப்பாவுக்கு போன் செய்து ஆரம்பம் முதல் தற்போது வரை மகா செய்யும் விசயங்களை கண்ணீருடன் சொல்ல அவர் பஸ் ஸ்டாண்டில் இருக்கும் மதுவை தடுத்து நிறுத்த கிளம்பி செல்கிறார்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்