Seetha Raman: வீட்டை விட்டு கிளம்ப சொல்லும் ராம்.. சீதா முடிவு என்ன
சீதா ராமன் இன்றைய எபிசோட் அப்டேட் என்ன என்பதை பார்க்கலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன்.
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா தலைவிரி கோலமாக வீட்டு வாசலில் உட்கார்ந்து இருக்க இங்கே வரும் துரை இதை தான் உங்களிடம் சொல்லனும்னு வந்தேன், ஆனால் நீங்க கேக்கல, என் அக்கா போனதுக்கு அப்புறம் மகாலட்சுமி வந்து தான் இந்த வீடு இப்படி ஆகிடுச்சு, நீ இங்க இருக்காதே வீட்டுக்கு போய் விடு என சொல்கிறான்.
இதனால் சீதா தன்னுடைய அப்பாவுக்கு போன் செய்ய அவர் ரிசப்ஷன் ரொம்ப நல்லா நடந்தது, நீ கொடுத்து வச்சவ என சந்தோஷமாக பேச சீதா இங்கு நடந்த விஷயங்களை சொல்லாமல் மறைக்கிறாள்.
மறுபக்கம் மதுமிதாவும் மாலினியும் ஆட்டோவில் சென்று கொண்டிருக்க அப்போது ராம் வீடியோ கால் செய்ய மதுமிதா கோவிலில் இருந்து பேசுவது போல் பேசி சமாளிக்கிறாள்.
இதனைத்தொடர்ந்து சீதா ரூமுக்கு வர ராம் அவளிடம் கோபப்படுகிறான். என் சித்தியை எதிர்த்து பேசுற, என் சித்தியை மதித்து இருப்பது என்றால் இங்கே இரு, இல்லையெனில் தாலியை கழட்டி வைத்து விட்டு கிளம்பி போ என கோபமாக பேசுகிறான்.
இதனால் சீதா எடுக்க போகும் முடிவு என்ன? அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.