Saregamapa: போருக்கு சென்று காணாமல் போன முக்கிய உறவு.. சரிகமபாவில் கில்மிஷாவின் கண்ணீர் கதை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Saregamapa: போருக்கு சென்று காணாமல் போன முக்கிய உறவு.. சரிகமபாவில் கில்மிஷாவின் கண்ணீர் கதை

Saregamapa: போருக்கு சென்று காணாமல் போன முக்கிய உறவு.. சரிகமபாவில் கில்மிஷாவின் கண்ணீர் கதை

Aarthi V HT Tamil
Aug 19, 2023 01:56 PM IST

சரிகமபாவில் இன்று கில்மிஷாவின் கண்ணீர் கதையை கேட்டு சினேகன் இன்ப அதிர்ச்சி அடைந்தார்.

சரிகமபா
சரிகமபா

அதாவது ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களது உறவினர் யாருக்காவது பிடித்த பாடலை அவர்களுக்காக பாட வேண்டும் என்பது தான் இந்த ரவுண்ட். இந்த ரவுண்டில் பாடிய கில்மிஷா மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் இடம் பிடித்த கண்டா வர சொல்லுங்க என்ற பாடலை பாடி அசத்தி கோல்டன் பெர்பாமன்ஸ் வாங்கினார்.

பிறகு கில்மிஷா இந்த பாடல்களை தனது தாய் மாமாவுக்காக பாடியதாக சொல்லி கண்ணீர் விட்டார், இலங்கையில் போர் நடந்த போது வீட்டிற்கு ஒரு ஆள் போருக்கு வர வேண்டும் என்ற சூழல் ஏற்பட்ட போது தாய் மாமா இருவர் சென்றதாகவும் போருக்கு சென்றவர்கள் தற்போது வரை வீடு திரும்பவில்லை, அவர்கள் உயிரோடு இருக்காங்களா? இல்லையா என்பது கூட தெரியவில்லை. நாங்களும் நிறைய இடத்தில தேடி பார்த்து நிறைய பணத்தையும் ஏமாந்துட்டோம் என கில்மிஷாவின் தாயார் கண் கலங்கி பேசியுள்ளார்.

இந்த சோக கதையை கேட்டு கண் கலங்கிய சினேகன் கில்மிஷாவுக்கு ஆறுதல் சொன்னது மட்டுமில்லாமல் உனக்கு தாய் மாமனாக நான் இருக்கேன் என்று சொல்லி அரங்கத்தை நெகிழ வைத்துள்ளார். இதை வெறும் வார்த்தையாக சொல்லாமல் அடுத்த 5 பெர்பாமன்ஸ் முடிவதற்குள் தனது மனைவி கன்னிகா ரவி மூலமாக பூ, பழம் என சீர் வரிசைகளை வாங்கி வர சொல்லி கில்மிஷாவுக்கு கொடுத்து உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

அடுத்து கில்மிஷாவின் தாய் மாமன்கள் கூடிய விரைவில் வீடு வந்து சேர வேண்டும் என மொத்த அரங்கமும் சேர்ந்து பிராத்தனை செய்துள்ளனர். இந்த சம்பவம் சரிகமப செட்டையே நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா தொகுத்து வழங்க ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், சைந்தவி மற்றும் அபிராமி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.