தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சரிகமப நிகழ்ச்சியில் ஷான் ரோல்டன் கொடுத்த வாக்குறுதி.. நடந்தது என்ன?

சரிகமப நிகழ்ச்சியில் ஷான் ரோல்டன் கொடுத்த வாக்குறுதி.. நடந்தது என்ன?

Aarthi V HT Tamil
Mar 21, 2023 04:09 PM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு என இரு தினங்களில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப.

சரிகமப
சரிகமப

ட்ரெண்டிங் செய்திகள்

அதற்கேற்ப போட்டியாளர்களும் தங்களது பெஸ்ட்டை கொடுத்து மக்களை கவர்ந்து வருகின்றனர். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் டி இமான் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற போது போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் சிறப்பாக பாடி வருகின்றனர். சந்தர்ப்பம் அமையும் போது நிச்சயம் அனைவருக்கும் தனது இசையில் பாட வாய்ப்பு கொடுப்பேன் என கூறி இருந்தார். குறிப்பாக புருஷோத்தமனுக்கு விரைவில் வாய்ப்பு கொடுப்பேன் என கூறி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஷான் ரோல்டன் போட்டியாளர் ஜீவனை பாராட்டி பேசினார். கண்டிப்பாக கூடிய விரைவில் இணைந்து பணியாற்றலாம் என தெரிவித்துள்ளார்.

அதோடு உன்னை நினைத்து பாடலை பாடிய புருஷோத்தமனை பாராட்டியது மட்டுமல்லாமல் அவர் இனி தொடர்ந்து தன்னுடைய குழுவில் பயணிப்பார் என சொல்லியுள்ளார். இதை கேட்ட புருஷோத்தமன் துள்ளி குதித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் புருஷோத்தமனுக்கு கண் பார்வை கிடைக்க சேனலுடன் இணைந்து தன்னால் முடிந்த உதவியை நிச்சயம் செய்வேன் என சொல்லி இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்துள்ளார். ஷான் ரோல்டனின் இந்த அறிவிப்பை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்