RIP Captain Vijayakanth: துயரம், வேதனை.. விஜயகாந்த் மறைவால் கதறும் பிரபலங்கள்
RIP Captain: நடிகர் விஜயகாந்த் மறைவு தொடர்பாக திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Captain Vijayakanth Passed Away: கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த், சிகிச்சை பலனின்றி இன்று ( டிச 28) காலமானார். அவருக்கு வயது 71.
விஜயகாந்த் மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த விஜயகாந்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
அவரது மறைவு தொடர்பாக மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், “நிமோனியா (நுரையீரல் அழற்சி) காரணமாக அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்றுவந்த விஜயகாந்துக்கு மருத்துவப் பணியாளர்களின் கடின முயற்சி இருந்தபோதிலும் காலமானார்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சியான் விக்ரம்
மிகவும் அன்பான மற்றும் அக்கறையுள்ள மனிதர்களில் ஒருவரின் காலமானதைக் கேட்டு வருத்தமடைந்தேன். நாங்கள் உங்களை இழப்போம் கேப்டன்.
ஆனந்தராஜ்
அவர் எனக்கு உடன் பிறந்த சகோதரர் போன்றவர். அவரது இழப்பு மிகுந்த வேதனையை தருகிறது என்றார் நடிகர் ஆனந்தராஜ். இவர் நடிகர் விஜயகாந்தின் படங்களில் வில்லனாக நடித்து இருக்கிறார்.
இயக்குநர் சேரன்
‘என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பசியைப் போக்கியவர். நல்ல மனிதர். ஷாக் அடித்தது போன்று இந்தச் செய்தி எனக்கு இருக்கிறது' என்றார் குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.
டி. இமான்
ஈடுசெய்ய முடியாத கேப்டன் இப்போது இல்லை. ஒரு சிறந்த மனிதனை உலகம் நிச்சயமாக இழக்கும். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். ரெஸ்ட் இன் பீஸ் டியர்ஸ்ட் சார்.
எனது நண்பர் கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களின் மறைவு மிகுந்த துயரமும், வேதனையும் அளிக்கின்றது. அவரின்மறைவு எங்கள் தமிழ் திரைப்படத் துறைக்கு பேரிழப்பாகும் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தேமுதிக தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இயக்குநர் பாரதிராஜா
எனது நண்பர் கேப்டன் திரு.விஜயகாந்த்
அவர்களின் மறைவு
மிகுந்த துயரமும், வேதனையும்
அளிக்கின்றது.அவரின்மறைவு
எங்கள் தமிழ் திரைப்படத்
துறைக்கு பேரிழப்பாகும்
அவரை இழந்து வாடும்
அவரது குடும்பத்தினருக்கும்
தேமுதிக தொண்டர்களுக்கும்
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
சரத்குமார்
அன்பு நண்பர் புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நம்முடன் இல்லை என்ற செய்தி கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானேன். என்றாவது ஒருநாள் குணமடைந்து, என்றும் போல் கேப்டன் மீண்டும் சுறுசுறுப்புடன் இயங்குவார் என எதிர்பார்த்த என்னை போல், அவரை நேசித்த லட்சோபலட்ச மக்களை இச்செய்தி மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டது.
அவரை இழந்து மீளாத்துயரில் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும், தமிழ்த் திரைக்கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும், தேமுதிக கட்சியினருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
ஆர்.ஜே.பாலாஜி
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்