Tamil News  /  Entertainment  /  Ravindar Chandrasekar Got Admitted In Icu

Ravindar Chandrasekar: அய்யோ என்ன ஆச்சு.. ஐசியூவில் சிகிச்சை பெறும் ரவீந்தர் சந்திரசேகரன்

Aarthi Balaji HT Tamil
Jan 11, 2024 09:42 AM IST

தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

ரவீந்தர் சந்திரசேகரன்
ரவீந்தர் சந்திரசேகரன்

ட்ரெண்டிங் செய்திகள்

இவர்களின் திருமணம் நீண்ட நாட்கள் இருக்காது என பலரும் பேசினார்கள். ஆனால் இருவரும் அதை சற்றும் கண்டு கொள்ளாமல் ஒருவரை ஒருவர் ஆழமாக காதலித்து வருகிறார்கள்.

திருமணமாகி ஓராண்டில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் சிறைக்கு சென்றார். படம் எடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது பாலாஜி புகார் கொடுத்து இருந்தார்.

இதனையடுத்து கைதான ரவீந்தர் சந்திரசேகர் ஒரு மாதத்திற்கு மேலாக புழல் சிறையில் இருந்தார். பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவர் பல்வேறு விதமான சேனலுக்கு யூடியூப் பேட்டி கொடுத்தார். அதில் தான் சிறையில் எப்படி கஷ்டப்பட்டேன் என்பதை உருக்கமாக பேசி இருந்தார்.

இவர் தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் 7 ஆவது சீசன் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து வருகிறார். அவரின் விமர்சனங்களுக்கு எதிராகவும், ஆதரவாகவும் கமெண்ட்கள் வந்த வண்ணம் உள்ளன. 

அண்மையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து வந்த போது ரவீந்தர் சந்திரசேகரனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது.  இதனால் அவர் மூக்கில் ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் யூடியூப்பில் வழக்கம் போல் தனது பிக் பாஸ் விமர்சனத்தை செய்தார். 

அவர் தனக்கு நுரையீரலில் இன்ஃபெக்‌ஷன் ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு இருப்பதாக கூறினார். அதன் காரணமாக ஒரு வாரம் ஐசியூவில் சிகிச்சை பெற்ற தகவலை வெளியிட்டார். இதை கேட்ட ரசிகர்கள் உடல்நலம் சரியாகும் வரை இப்படி கஷ்டப்பட்டு பிக் பாஸ் விமர்சனம் செய்ய வேண்டாம் என அவருக்கு அறிவுரை வழங்கினார்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.