கிறிஸ்துமஸ்க்கு நோ! பொங்கலுக்கு எஸ்! சங்கர் படத்தின் புதுஅப்டேட்!
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் நடித்து வரும் கேம் சேஞ்சர் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியாக உள்ளது.

தமிழின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஷங்கர் அவர்கள் பிரம்மாண்டத்திற்குப் பெயர் போனவர். ஜென்டில் மேன் திரைப்படம் தொடங்கி பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார். சமீபத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 கலவையான விமர்சனங்களை பெற்றது. மேலும் இந்தியன் படத்தின் மூன்றாவது பாகமும் வெளிவரும் எனக் கூறப்பட்டுள்ளது. இவரது படங்களில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு ஏற்றவாறு பல காட்சிகளும், பாடல்களும் அமைந்து இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக இவரது படங்கள் சரிவர போக வில்லை.
இதுவரை தமிழில் மட்டுமே இயக்கி வந்த இவர் தனது முதல் தெலுங்கு திரைப்படமான கேம் சேஞ்சர் படத்தை எடுத்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக தயாரிப்பு பணியில் இருந்த இப்படம் குறித்த அறிவிப்பு தேதி வெளியாகி உள்ளது.
அப்டேட் கொடுத்த ராம் சரண்
இயக்குனர் ஷங்கரின் முதல் தெலுங்கு படமான கேம் சேஞ்சர் ரிலீஸ் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ராம் சரண் மற்றும் கியாரா அத்வானி நடித்துள்ள இப்படம் இந்த ஆண்டு கிறிஸ்மஸ் அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.