Rajini Vs Vijay: ஏன் தலைவா இப்படி.. விஜய்யை வெறுப்பேற்ற அக்கட தேசத்திற்கு வாழ்த்து சொன்ன ரஜினி
கணபத் திரைப்படம் மாபெரும் வெற்றியடைய நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து சொல்லியுள்ளார்.
பாலிவுட் திரைப்படமான கண்பத் இன்று ( அக். 20 ) திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் நிலையில் படத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து சொல்லி உள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில், “ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டைகர் ஷெராப். கண்பத்தின் அனைத்து நடிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள். படம் மாபெரும் வெற்றியடையட்டும்” என்று பதிவிட்டு உள்ளார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் பொதுவாக அனைத்து ஸ்டார் படத்திற்கு வாழ்த்து சொல்ல தெரிந்த ரஜினிக்கு ஏன் லியோவுக்கு வாழ்த்து சொல்ல தெரியவில்லை. அப்போ உண்மையில் இவர் விஜய்யை எதிரியாக பார்க்கிறாரா? என கேள்வி கேட்டு வருகின்றனர்.
ஏற்கனவே ரஜினிகாந்த், விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை வெடித்து வருகிறது. அதற்கு மேலும் தீனி போடும் வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த பதிவை வெளியிட்டு இருக்கிறார். இதனால் இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் மீண்டும் வாக்குவாதம் செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.
பாலிவுட்டில் ஜவானுக்குப் பிறகு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் கண்பத். டைகர் ஷெராப், கீர்த்தி சனோன், அமிதாப்பச்சன் நடித்து இருக்கிறார்கள். இப்படத்தை விகாஸ் பாஹ்ல் இயக்கி இருக்கிறார். சூப்பர் ஹீரோ பின்னணியில் படம் உருவாகி இருக்கிறது.
பூஜா எண்டர்டெயிண்ட் மற்றும் குட் கோ இணைந்து படத்தை தயாரித்துள்ளது. இந்தியில் உருவான இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம். மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்