Baashaa: அமிதாப் பட டிஸ்கஷனில் உருவான பாட்ஷா.. சுவாரஸ்சிய கதை!
கல்ட் கிளாசிக்காக பார்க்கப்படும் இந்த திரைப்படம் டிவியில் 11.79 ரேட்டிங்கை பெற்று சாதனை படைத்திருக்கிறது
(1 / 7)
கடந்த 1995 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘பாட்ஷா’.
(2 / 7)
ரஜினியின் கல்ட் கிளாசிக்காக பார்க்கப்படும் இந்த திரைப்படம் டிவியில் 11.79 ரேட்டிங்கை பெற்று சாதனை படைத்திருக்கிறது.
(3 / 7)
அமிதாப்பச்சன் மற்றும் கோவிந்தா நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஹம்’ படத்தின் டிஸ்கஷனில் ரஜினி இருந்தார்.
(4 / 7)
பாலிவுட் நடிகர் கோவிந்தா காவல் அதிகாரியாக பதவியேற்பது போலவும், அவரது அண்ணனான அமிதாப் பச்சன் காவல் அதிகாரிகளை தன்னுடைய ஸ்டைலில் மிரட்டுவது போலவும் காட்சி. ஆனால் அந்த படத்தின் டைரக்டர் அந்த காட்சியை படத்தில் வைக்கவில்லை
(5 / 7)
அந்த ஒரு காட்சி ரஜினியை மிகவும் ஆழமாக பாதித்து விட்டது. அங்கு கிடைத்த ஒரு பொறியை அப்படியே இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவிடம் சொல்லி அதனை கதையாக டெலவப் செய்ய சொல்லி இருக்கிறார். அந்தக்கதைதான் பாட்ஷா
மற்ற கேலரிக்கள்