Rajini: ரஜினியை அசிங்கப்படுத்திய ராதிகா.. பார்த்திபனுடன் நடக்கும் அதிரடி போட்டி
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajini: ரஜினியை அசிங்கப்படுத்திய ராதிகா.. பார்த்திபனுடன் நடக்கும் அதிரடி போட்டி

Rajini: ரஜினியை அசிங்கப்படுத்திய ராதிகா.. பார்த்திபனுடன் நடக்கும் அதிரடி போட்டி

Aarthi V HT Tamil
Mar 07, 2023 01:48 PM IST

ரஜினி சிரீயலின் இன்றைய அப்டேட்

ரஜினி
ரஜினி

இந்த சீரியலில் குடும்பம் இரண்டாக பிரிந்த காரணத்தினால் குடும்ப தேவையை பூர்த்தி செய்ய அனைவரும் வேலைக்கு செல்ல தொடங்கினர். இப்படியான நிலையில் வரும் நாட்களில் இந்த சீரியலில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

அதாவது, பார்த்திபன் சைன் செய்த டைவர்ஸ் பத்திரம் ராதிகா கையில் கிடைக்கிறது. அதை வைத்து ராதிகா ரஜினியை டைவர்ஸ் பேப்பரில் கையெழுத்து போட வைக்கிறாள். இதனால் இருவருக்கும் நடந்தது தெரியாமல் ரஜினி, பார்த்திபன் இடையே மனஸ்தாபம் வருகிறது.

பிறகு பார்த்திபன் பாரீன் போக டிக்கெட் எடுக்க பணம் இல்லாமல் தவிக்க ரஜினி பார்த்திபனுக்கு தெரியாமல் உதவி செய்து டிக்கெட் எடுத்து கொடுக்கிறாள்.

அடுத்து ஒரு கட்டத்தில் ரஜினி பார்த்திபன் என இருவரும் 1 மணி நேரம் ஒருவரை ஒருவர் நினைக்காமல் இருக்க வேண்டும் என போட்டி வைத்துக் கொள்கின்றனர். ஆனால் இப்போது போட்டியில் இருவரும் ஒருவரை ஒருவர் நினைத்து தோற்று போகின்றனர்.

அடுத்து ரஜினி MLA-விடம் பேசி முரளி மனைவியை யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு வர வைக்கிறாள். இதனால் அனைவரும் ரஜினியை ஜெயித்து விட்டதாக சந்தோஷப்படுகிறார்கள்.

அடுத்து சுமங்கலிகள் ரஜினி வீட்டிற்கு வந்து அனைவரையும் ஆசிர்வதிக்க, ரஜினியும் ஆசீர்வாதம் வாங்க போகிறாள். ராதிகா நீ சந்தோஷமா வாழல நீயெல்லாம் ஆசீர்வாதம் வாங்கக்கூடாது என சொல்லி ரஜினியை அசிங்கப்படுத்துகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எனவே ரஜினி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.