Rajini: தேடி வந்த வந்த பாரீன் வேலை.. ரஜினிக்காக பார்த்திபன் எடுக்கும் முடிவு?
ரஜினி சீரியலின் இன்றைய அப்டேட்டை பார்க்கலாம்.
ரஜினிஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ரஜினி.
இந்த சீரியலில் பார்த்திபன் பாரீன் போக அப்ளை செய்த நிலையில் அவனுக்கே பாஸ்போர்ட் வருகிறது. பாரீன் கிளம்பி போவதற்குள் ரஜினியின் ஆசைகளை நிறைவேற்றி விட வேண்டும் என முடிவெடுக்கிறான்.
இப்படியான நிலையில் இந்த சீரியலில் வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது. அதாவது, பார்த்திபன் ரஜினியிடம் அவளது ஆசைகள் குறித்து கேட்க சொல்ல மறுக்கும் ரஜினி அவனையே கண்டு பிடிக்க சொல்கிறாள்.
மறுபக்கம் ரஜினி குடும்பத்தினர் முனுசாமி பூஜையை ஏற்பாடு செய்ய அரவிந்த், குபேரன் என இருவரும் சேர்ந்து அவர்களுக்கு எதிராக பூஜை செய்து வெறுப்பேற்றுகின்றனர்.
அடுத்து பார்த்திபன் தனது அக்கா அனிதாவிடம் ரஜினியின் ஆசைகளை கேட்டு அறிய முடிவெடுக்க அனிதா ஒரு பெரிய லிஸ்ட்டை கொடுக்கிறாள்.
மேலும் ரஜினி குடும்ப செலவை ஏற்றுக் கொள்ளாததால் ஆளுக்கு ஒரு வேலைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்ற கோணத்தில் சீரியல் கதைக்களம் நகர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே ரஜினி சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
வெளியே துரத்திய மகாலட்சுமி.. சீதா எடுத்த முடிவு என்ன? சீதா ராமன் சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் சீதா ராமன்.
இப்படியான சீரியலில் இன்றைய எபிசோடில் மகாலட்சுமி தனது மகன் ராமுக்காக காத்திருக்க அவன் சீதாவுடன் மணக்கோலத்தில் வந்து இறங்க மகாலட்சுமி அதிர்ச்சி அடைகிறாள்.
இந்த கல்யாணத்தை என்னால் ஏத்துக்க முடியாது என உள்ளே வர ராமின் அத்தை மீரா மகாலட்சுமியிடம் சீதாவின் கழுத்தில் ராம் தாலி கட்டி இருக்கான். இப்படி வெளியே போக சொன்னா அந்த பொண்ணு என்ன பண்ணுவா என பேச மகாலட்சுமி ராஜசேகருக்கு போன் செய்து கோபப்படுகிறாள். சீதா குடும்பத்தை பற்றி தவறாக பேசுகிறாள்.
மறுபக்கம் கொட்டும் மழையில் சீதா நனைந்த படி நின்று கொண்டிருக்க ராம் பால்கனியில் நின்று பார்த்துக் கொண்டிருக்க மீரா சீதாவை அப்பா வீட்டுக்கு போக சொல்லி பேசுகிறாள்.
ஆனால் சீதா என் கழுத்தில் தாலி கட்டினவர் வந்து சொல்லட்டும், நான் எதுக்கு போகணும் என பதிலடி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சீதா ராமன் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
டாபிக்ஸ்