Rajini Final Episode: ரஜினி எடுத்த முடிவு.. விலகி நிற்கும் குடும்பம், கிளைமேக்ஸில் நடக்க போவது என்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajini Final Episode: ரஜினி எடுத்த முடிவு.. விலகி நிற்கும் குடும்பம், கிளைமேக்ஸில் நடக்க போவது என்ன?

Rajini Final Episode: ரஜினி எடுத்த முடிவு.. விலகி நிற்கும் குடும்பம், கிளைமேக்ஸில் நடக்க போவது என்ன?

Aarthi V HT Tamil
Apr 29, 2023 12:59 PM IST

ரஜினி சீரியலின் கடைசி எபிசோட் குறித்து பார்க்கலாம்.

ரஜினி
ரஜினி

ரஜினி, பார்த்திபன் பிரிய முடிவெடுத்து பார்த்திபன் பாரீன் கிளம்ப அவனது அம்மா நீ ரஜினியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என சொல்ல அவன் மீண்டும் திரும்பி காபி ஷாப் வர அங்கு ரஜினி இல்லை.

இப்படியான நிலையில் ரஜினி சீரியலின் கிளைமாக்ஸ் வரும் ஞாயிறு மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிலையில் இப் ஸ்பெஷல் எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்து தெரிய வந்துள்ளது.

அதாவது, ரஜினி காபி ஷாப்பில் இருந்து காணாமல் போன நிலையில் பார்த்திபன் ரஜினியின் குடும்பத்தாரை சந்திக்க இருவரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லி பிறகு சமாதானமாகி ரஜினியை தேட தொடங்குகின்றனர்.

மறுபக்கம் ரஜினி தனது நண்பன் அர்ஜுனை ( பிரஜன்) சந்திக்கிறாள். அவனிடம் நடந்த விஷயங்களை சொல்ல நான் தான் உனக்கு திருமண வாழ்க்கை செட்டாகாதுனு அப்பவே சொன்னேன்ல என பேச ரஜினி குழந்தையை தத்தெடுக்க போவதாக சொல்கிறாள்.

பிறகு இருவரும் குழந்தையை தத்தெடுக்க ஆசிரமத்துக்கு கிளம்ப மறுபக்கம் ரஜினி அர்ஜுனை சந்தித்திருக்க வாய்ப்புள்ளது என பார்த்திபனும் ரஜினி குடும்பமும் தேடி வருகிறது. ஆனால் அர்ஜூன் வீட்டில் ரஜினியை பார்க்க முடியாமல் போகிறது.

குடும்பத்தினர் ஒவ்வொருவராக ரஜினிக்கு போன் அடிக்க பார்த்திபன் போன் மட்டும் தான் எடுப்பேன் என ரஜினி போனை அட்டென் செய்யாமல் இருக்கிறாள். பார்த்திபன் போன் செய்யும் நேரத்தில் ரஜினி போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விடுகிறாள்.

அடுத்து இவர்கள் ஆசிரமத்துக்கு வந்து இறங்க அங்கு ஆசிரமமே பிரச்சனையில் இருக்க அர்ஜூன் அங்கு சண்டை போட்டு குழந்தைகளை மீட்டெடுக்கிறான்‌‌. அடுத்து இவர்கள் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு செல்ல பார்த்திபன் ரஜினி குடும்பம் ஆசிரமத்துக்கு வந்து பார்க்க ரஜினி குழந்தைகளுடன் கிளம்பி சென்ற விஷயம் தெரிய வருகிறது.

பிறகு இவர்கள் கோவிலுக்கு கிளம்பி செல்ல ரஜினி தனது குடும்பத்தினரை மட்டுமே பார்க்கிறாள். பார்த்திபனை பார்க்க முடியாமல் போக நான் ஒரு முடிவெடுத்து இருக்கேன், என்னை யாரும் தடுக்காதீங்க என சொல்ல ரஜினியின் நிம்மதிக்காக அவளது குடும்பம் அவளை தடுக்காமல் அவளை தேடாமல் விலகி கொள்கிறது.

அடுத்து ரஜினி தனது பிடித்த இடமான ஒரு மரத்தின் அருகே வர அங்கே பார்த்திபன் அவளுக்கு முன்பாக அங்கு நிற்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்ற கோணத்தில் ரஜினி கிளைமாக்ஸ் பரபர திருப்பங்களுடன் இருக்கும் என தெரிய வந்துள்ளது.

எனவே வரும் ஞாயிறு மதியம் 2 மணி முதல் 4.30 மணி வரை ஒளிபரப்பாக உள்ள ரஜினி கிளைமேக்ஸை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள். இதனை தொடர்ந்து 4.30 மணி முதல் 6.30 மணி வரை ரஜினி சீரியலின் வெற்றி கொண்டாட்டம் ஒளிபரப்பாக உள்ளது.

இந்த வெற்றி கொண்டாட்டத்தில் ரஜினி சீரியல் குழுவினர் பங்கேற்று சீரியலில் நடித்த அனுபவங்கள், சுவாரஷ்யமான தருணங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர். எனவே ஞாயிறு மதியம் மதியம் 2 மணி முதல் 6.30 மணி வரை என மொத்தம் நான்கரை மணி நேரம் ரஜினி சீரியல் ரசிகர்களுக்கு Non stop கொண்டாட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.