Andhagan Box Office: பாராட்டுகளை பெற்ற அந்தகன்.. பிரசாந்த் பட முதல் நாள் வசூல் என்ன தெரியுமா?
Andhagan Box Office: நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தகன் படம் மூலமாக கம் பேக் கொடுத்து இருக்கும் பிரசாந்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
Andhagan Box Office: இயக்குநர் தியாகராஜன் இயக்கத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரியா ஆனந்த், சிம்ரன், யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகி இருக்கும் திரைப்படம் அந்தகன்.
இந்தியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அந்தாதூன் படத்தின் ரீமேக்கான இந்த படத்திற்கு, இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து இருக்கிறார்.
பாலிவுட் பட ரீமேக்
பாலிவுட் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தபு, ஆயுஷ்மான் குர்ரானா, ராதிகா ஆப்தே நடித்து வெளியான அந்தாதூன் படத்தின் ரீமேக் தான் அந்தகன். வனிதா விஜயகுமார், சமுத்திரகனி, ஊர்வசி, யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்பட பலரும் நடித்துள்ளார்கள்.
பார்வையற்ற இசை கலைஞராக வரும் பிரசாந்த் தன்னை அறியாமலேயே ஒரு கொலையில் சிக்கி கொள்ள அதன் பின்னர் நடக்கும் திருப்பங்கள் தான் படத்தின் கதை என கூறப்படுகிறது.
க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவான இந்த படம் ஏற்கனவே தெலுங்கில் மேஸ்ட்ரோ, மலையாளத்தில் பிரம்மம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.
இந்த படங்களை தொடர்ந்து தற்போது தமிழிலும் உருவாகியிருக்கிறது. தமிழில் தபு கதாபாத்திரத்தில் சிம்ரனும், ஆயுஷ்மான் குர்ரானா கதாபாத்திரத்தில் பிரசாந்தும், ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் ப்ரியா ஆனந்தும் நடித்துள்ளார்கள். கார்த்திக் முக்கியத்துவம் மிக்க கேரக்டரில் நடித்துள்ளார்.
ரீமேக் மேக்கிங் எப்படி இருக்கிறது?
இந்தியில் வெளியான அந்தாதூன் படத்தின் ரீமேக்தான் அந்தகன். அந்த படத்தின் கதை இயல்பாகவே ஸ்ட்ராங்கானது என்பதால், திரைக்கதையில் மட்டும் நல்ல கவனம் செலுத்தி படத்தை எடுத்தாலே படத்தை ஓரளவு கரை சேர்த்து விடலாம். அதனை தன்னால் முடிந்த மட்டும் செய்ய முயற்சி செய்திருக்கிறார் படத்தின் இயக்குநர் தியாகராஜன்.
படத்தின் மிகப்பெரிய பலம் கதாபாத்திர தேர்வு. படத்தில் வரும் கதாபாத்திரங்களுக்கு, மிகச் சரியான நடிகர்களை தேர்வு நடிக்க வைத்திருந்தது கதையோடு நம்மை இயல்பாக ஒன்ற செய்திருந்தது. கதையின் மிகப்பெரிய பலவீனம் இசை...ஒரு மியூசிக் த்ரில்லர் படத்தின் இசைக்கு உரித்தான ஒரு சுவடு கூட படத்தில் தெரியவில்லை. படத்தின் மோசமான பின்னணி இசையும், பல இடங்களில் இசை இல்லாததும், படத்தின் சுமாரான திரைக்கதையை இன்னும் சுமாரக்கி விட்டது.
அந்தகன் முதல் நாள் வசூல்
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்தகன் படம் மூலமாக கம் பேக் கொடுத்து இருக்கும் பிரசாந்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
அதன் படி, அந்தகன் படம் இந்தியா முழுவதும் முதல் நாளில் 50 லட்சம் ரூபாய் வசூல் செய்து உள்ளது என கூறப்படுகிறது. இந்த தகவல் படக்குழு தரப்பில் அதிகாரப்பூர்வமாக எதுவும் சொல்லப்படவில்லை. அதேபோல் வார இறுதி நாட்களான இன்றும், நாளையும் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என படக்குழு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்