Poornima Ravi: ரூ.16 லட்சம் மட்டுமில்ல பூர்ணிமா வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பூர்ணிமா வாங்கிய சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் 7 ஆவது சீசனின் 14 ஆவது வாரத்தில் உள்ளது, இந்த மாதம் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருவதால், நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பார்வையாளர்களை ஆர்வமூட்டும் மற்றும் போட்டியாளர்களை வைத்து பிக் பாஸ் குழு மாஸ்டர் பிளான்களை போட்டு வருகிறது.
நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி இருப்பதால் வழக்கம் போல் பணப்பெட்டி டாஸ்க் வழங்கப்பட்டது. கடந்த மூன்று நாட்களாக யாருமே பணப்பெட்டியை எடுக்காத நிலையில் பிக் பாஸ் தொகையை உயர்த்தி கொண்டே இருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ரூ.16 லட்சம் எடுத்து கொண்டு பூர்ணிமா வெளியேறி இருக்கிறார். தான் எடுத்து செல்லும் முடிவில் இருப்பதாக ஏற்கனவே பூர்ணிமா, மாயவிடம் ஆலோசனை செய்து வந்தார்.
இந்நிலையில் 97 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த பூர்ணிமா வாங்கிய சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.
அதன் படி பூர்ணிமா 97 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்துள்ள நிலையில் ஒரு நாளைக்கு அவருக்கு சம்பளமாக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக 14 லட்சம் ரூபாய் சம்பளம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு கிடைக்கும்.
அத்துடன் 16 லட்சம் ரூபாய் பணப்பெட்டி மற்றும் 14 லட்சம் ரூபாய் சம்பளம் என ஒட்டுமொத்தமாக 30 லட்சம் ரூபாய் வரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பூர்ணிமாவுக்கு கிடைத்து இருக்கிறது.
முன்னதாக பூர்ணிமா வெளியேறிய நிலையில் பிரதீப் ரசிகர்கள் ரெட் கார்டு கொடுத்த அவருக்கு இது தேவை தான் என ட்விட் செய்து வருகிறார்கள். இதை பார்த்த பூர்ணிமா ரசிகர்கள், கேரக்டர் அசாசினேஷன் கேம் பிரதீப் விளையாடியதாக மறுபக்கம் சாடி வந்தனர்.
இதனால் கடுப்பான பிரதீப் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், “ பூர்ணிமா அம்மா கிட்ட வாக்கு கொடுத்த ஒரே காரணத்துக்காக அமைதியா இருக்கேன். கூலிக்கு மாறு அடிக்குற கும்பல் லாம் இஷ்டத்துக்கு பேசி வாய் கெளறாதீங்க. நான் கேரக்டர் அசாசினேஷன் கேம்களை விளையாடுவதில்லை, அது என்னுடைய பாணி கிடையாது “ என்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.