National Film Awards: பொன்னியன் செல்வனுக்கு நான்கு.. தமிழ் மொழிக்கு மொத்தம் எத்தனை தேசிய விருதுகள்?
National Film Awards: தமிழ் மொழியை சேர்ந்த படங்கள் எந்தெந்த வகை, எத்தனை தேசிய விருதுகளை வென்று உள்ளது என்ற முழு பட்டியலை விரிவாக பார்க்கலாம்.
National Film Awards: 70 ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 39 மொழிகளில் இருந்து சிறந்த படங்களை தன்னால் பார்க்க முடிந்தது என்று கூறி விருது அறிவிப்பிற்குள் சென்றனர்.
2022 ஆம் ஆண்டு வெளியாகும் படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்படும். அதாவது 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை தணிக்கை செய்யப்பட்ட திரைப்படங்கள் இந்த விருதுக்கு பரிசீலிக்கப்படும். 2023 ஆம் ஆண்டின் வெற்றியாளர்களை அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் அறிவிப்போம் என்றும் குழு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு நடுவர் குழுவில் சிறப்பு திரைப்பட ஜூரியின் தலைவராக ராகுல் ரவைல் உள்ளார். நான்-ஃபீச்சர் ஃபிலிம் ஜூரியின் தலைவர், நிலா மதாப் பாண்டா இருக்கிறார் மற்றும் சினிமா ஜூரி பற்றிய சிறந்த எழுத்தாளரின் தலைவராக கங்காதர் முதலியார் இருக்கிறார்.
இந்த நிலையில் தமிழ் மொழியை சேர்ந்த படங்கள் எந்தெந்த வகை, எத்தனை தேசிய விருதுகளை வென்று உள்ளது என்ற முழு பட்டியலை விரிவாக பார்க்கலாம்.
திருச்சிற்றம்பலம்
கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். மித்ரன். ஆர். ஜவஹர் இயக்கி இருந்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.
இதில் நடித்த நித்யா மேனனுக்கு, சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதே
அதே போல் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம் பெற்று உள்ள, 'மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே ‘ பாடலுக்காக சிறந்த நடன இயக்குநராக ஜானி மாஸ்டர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடிகர்கள் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா, சோபிதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம், பொன்னியன் செல்வன். இந்த படம் தேசிய விருதுகளை வென்று சாதனை மேல் சாதனை படைத்து உள்ளது.
- சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது அந்தப்படத்தின் ஒளிப்பதிவாளர் ரவிவர்மனுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- சிறந்த ஒலி அமைப்பிற்கான விருதும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒலி அமைப்பாளராக பணியாற்றிய ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- பொன்னியின் செல்வன் படத்திற்காக ஏ. ஆர். ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம் அவர் 7வது முறையாக இந்த விருதை பெறுகிறார்.\
- சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் பொன்னியன் செல்வன் வென்று இருக்கிறது.
பொன்னியின் செல்வன் படம் மட்டும் மொத்தம் 4 பிரிவுகளில் தேசிய விருதுகளை அள்ளி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்