தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Pathu Thala Review Starring Silambarasan, Gautham Karthik, Gautham Vasudev Menon, Priya Bhavani Shankar, Anu Sithara, Teejay Arunasalam, Kalaiyarasan, Redin Kingsley

Pathu Thala Review: ‘பத்து தல’ மொத்த கலெக்‌ஷனை அள்ளுமா? ‘நறுக்’ விமர்சனம்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 30, 2023 09:47 AM IST

Pathu Thala Movie: விக்ரம் படம் போலவே இடைவேளையில் சிம்புவை அறிமுக படுத்தி இருக்கிறார்கள். அது ஏதோ வலிந்து திணிக்கப்பட்டது போல இருக்கிறது.

பத்து தல போஸ்டர்
பத்து தல போஸ்டர்

ட்ரெண்டிங் செய்திகள்

கதையின் கரு:

தமிழக முதல்வராக இருக்கும் சந்தோஷ்பிரதாப்புக்கும் அவரது அண்ணன் கெளதம் வாசுதேவ் மேனனுக்கும் இடையேயான அரசியல் மோதல் உச்சம் தொட, திடீரென்று சந்தோஷ் கடத்தப்படுகிறார். சி.எம்,மிஸ்ஸிங் என்ற செய்தி நாடு முழுவதும் பரவ, பரபரப்பு பற்றிக்கொள்கிறது.

முதல்வர் இல்லாததால், இடைகால முதல்வராக ஏஜிஆராக வரக்கூடிய சிலம்பரசனின் விசுவாசி கிருஷ்ணா அமர்த்தப்படுகிறார். இதனிடையே சி.எம்,மை தேடும் போலீஸ் வேட்டையானது மணல் கடத்தல் மன்னனாக இருக்கும் சிம்புவிடம் சென்று முட்டி நிற்கிறது. 

அதனைத்தொடர்ந்து சிம்புவை வேவு பார்க்க களத்தில் ரெளடி போர்வையில் களம் இறக்கப்படுகிறார் கெளதம் கார்த்திக். இறுதியில் கடத்தப்பட்ட முதல்வர் மீட்கப்பட்டாரா இல்லையா?.. சிலம்பரசனால் அரசியல் பிரச்சினைகளை சந்திக்கும் கெளதம் மேனனுக்கும் அவருக்கும்  இடையேயான மோதல் எங்கு போய் முடிந்தது? சிலம்பரசன் கோட்டைக்குள் இருக்கும் கெளதம் கார்த்திக்கின் நிலை என்ன? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே பத்து தல படத்தின் கதை!

கருப்பு வேட்டி சட்டை, சால்ட் அண்ட் பெப்பர் லுக்.. கண்ணில் நிதானம்..என சிலம்பரசனின் ஸ்கீரின் பிரசன்ஸ் மிரட்டுகிறது. அவர் வரும் ஒவ்வொரு காட்சிக்கும், பேசும் ஒவ்வொரு வசனத்திற்கும் திரையரங்கத்தில் ரசிகர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். படத்தின் ஆகப்பெரும் அச்சாணியாக இருப்பதும் அவரது நடிப்புதான். சபாஷ் சிலம்பரசன்.. 

கெளதம் கார்த்திக்கிற்கு நீண்ட நாட்களுக்கு பிறகு நல்ல வேடம்.. நடிப்பிலும் முன்னேறியிருக்கும் கெளதம் கார்த்திக்  ஆக்சனிலும் அதகளம் செய்து இருக்கிறார். அவரின் காதலியாக வரும் ப்ரியா பவானி ஷங்கரின் காதலில் ஆழமில்லை என்றாலும் கொடுத்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். சிம்புவுக்கு போட்டியாக வெள்ளை வேட்டி சட்டை கட்டி வில்லனாக வரும் கெளதம் வாசுதேவ் மேனன் வழக்கம் போல வில்லனிஸத்தில் மிரட்டி இருக்கிறார். 

இவர்களெல்லாம் ஒரு பக்கம் கதாநாயகர்கள் என்றாலும் கூட, படத்தின் இன்னொரு கதாநாயகன் ஏ.ஆர்.ரஹ்மான். ராவடி, நம்ம சத்தம், நினைவிருக்கா, நீ சிங்கம் தான் என பாடல்களில் வெரைட்டி காட்டியவர் பின்னணி இசையில் ஒவ்வொரு சீனுக்கும் பின்னாலும் அவ்வளவு மெனக்கெட்டு இருக்கிறார். அன்பு முத்தங்கள் ஏ.ஆர்.ஆர். 

படத்தில் கதாபாத்திரங்கள் பேசும் கன்னியாகுமரி பாஷை படத்திற்கு வேறொரு டோனை கொடுத்து இருக்கிறது. படத்தின் இடைவேளைக்கு முந்தைய சீன் வரைக்குமே சிலம்பரசனை எதிர்பார்த்து எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு அவர் என்ட்ரியான சீன் தரமான சம்பவம் அமைந்தது. 

ஆனால் சிலம்பரசன் இடைவேளையில் காண்பிக்க படுவதற்கான ஸ்ட்ராங்கான காரணம் இல்லாதது நமக்கு சற்று அயர்ச்சியை தந்தது. முதல் பாதி முழுக்க கெளதம் கார்த்திக், இரண்டாம் பாதி முழுக்க சிலம்பரசன் என கணக்கு போட்ட கிருஷ்ணா அதனை நன்றாகவே சரிகட்டி இருக்கிறார். 

இரண்டாம் பாதியில் ஏற்கனவே நாம் பார்த்து பழகிய தேவர்மகன் படம் போன்ற காட்சிகள் இருப்பினும் அதில், நம்மிடம் சோர்வை அண்டவிடாமல் செய்வது சிலம்பரசன் நடிப்பு. ஃபரூக் ஜே பாஷா கேமராவின் டாப் ஆங்கிள் ஷாட்கள்.. கிளைமேக்ஸ் காட்சியை அவர் அணுகிய விதம் நன்றாக இருந்தது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரசியத்தை கூட்டி இருந்தால்.. பத்து தல பாம்பாய் படம் எடுத்திருக்கும்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்