OTTplay Premium: 32 ஓடிடி தளங்கள்..4000 ஜிபி நெட்.. ஓடிடி ப்ளே ப்ரீமியத்தின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
முன்னணி வரிசையில் இருக்கு 14 ஓடிடி தளங்களை அணுகும் வசதியை கொண்டிருக்கும் இந்த தளத்தில் SunNXT, Sony Liv, Zee 5, Lionsgate Play, Distro TV, Namma Flix, ALT Balaji, Play Flix, iStream, Fancode, Shorts TV, and Raj Digital உள்ளிட்டவற்றில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளையும் பார்க்க முடியும்.
அதிவேக இணையப்பயன்பாட்டின் தேவை மற்றும் மொழிகள் கடந்து பொழுது போக்கை நேசிக்கும் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, ஓடிடி ப்ளே ப்ரீமியம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு கொண்ட ஸ்ட்ரீமிங் தளமான இதனை ஓடிடி ப்ளே (KCCL) Kerala Communicators Cable Limited உடன் இணைந்து மிகப்பெரிய தளமாக உருவாக்கி இருக்கிறது.
50 MBPS அளவு வேகம் கொண்ட இணைய சேவை கிடைக்கும் இந்த சேவையில், 4000 ஜிபி அளவுக்கான இணைய சேவையை பயன்படுத்திக்கொள்ளும் வசதி இருக்கிறது.
முன்னணி வரிசையில் இருக்கு 14 ஓடிடி தளங்களை அணுகும் வசதியை கொண்டிருக்கும் இந்த தளத்தில் SunNXT, Sony Liv, Zee 5, Lionsgate Play, Distro TV, Namma Flix, ALT Balaji, Play Flix, iStream, Fancode, Dollywood Play, Shorts TV, and Raj Digital உள்ளிட்டவற்றில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகளையும் பார்க்க முடியும். இதற்கான கட்டணம் வெறும் 616 ரூபாய் மட்டுமே.
இந்த புதிய ப்ளாட்ஃபார்மின் தொடக்க விழா கேரளாவில் கடந்த 22ம் தேதி நடந்தது. நிகழ்வில் கலந்து கொண்ட ஓடிடி ப்ளேவின் சிஇஓ மற்றும் இணை நிறுவனரான அவினாஷ் முதலியார் பேசும் போது, “ ஓடிடி ப்ளே ப்ரீமியம் ஸ்ட்ரீமிங் தளத்தின் டெக்னாலாஜியும், அதிகமான பொழுது போக்கு அம்சங்களும் பார்வையாளர்களின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும்.
KCCL உடன் கை கோர்த்து இந்த பயணத்தை மேற்கொள்வது, எங்களது ரீச்சிற்கும், பார்வையாளர்களுக்கு விரிவான தொகுப்பை அதிகவேக இணையதளவசதியுடன் வழங்குவதற்கும் வழி வகுத்து இருக்கிறது. இந்த பார்ட்னர்ஷிப்பானது இந்த துறையில் புதிய தரத்தை உருவாக்கும்” என்று பேசினார்.
Cable TV Operators Association -ன் பொது செயலர் கேவி ராஜன் பேசும் போது, “ KCCL என்பது பொழுது போக்குத்துறையில் மிகப்பெரிய ஜாம்பாவான்களுடன் போட்டிக்கொண்டு இருக்கிறது. தற்போது அதனுடன் இந்த சேவை இணையும் போது, KCCL வாடிக்கையாளர்கள் வருகை அதிகமாகும்.” என்றார்.
3 மாதம், 6 மாதங்கள் என இதில் ப்ளான்கள் கிடைக்கின்றன. இதில் 32 ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்களை பார்க்கும் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
டாபிக்ஸ்