"ரஜினிக்கு அன்பும் வாழ்த்துகளும்! வேட்டையன் படத்தை பாராட்டிய சீமான்!
ராஜினிகாந்த் நடித்து சில தினங்களுக்கு முன் வெளியாகிய வேட்டையன் திரைபடத்தையும், படக் குழுவினரையம் பாராட்டி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராஜினிகாந்த் நடித்து சில தினங்களுக்கு முன் வெளியாகிய வேட்டையன் திரைபடத்தையும், படக் குழுவினரையம் பாராட்டி நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்தான அவரது X தளத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். படத்தின் அனைத்து கலைஞர்களையும் அதில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.
இது குறித்தான அவரது X தள பதிவில், 'தமிழ்த்திரையுலகின் பெரும் புகழ் கொண்ட திரைநட்சத்திரம் பேரன்பிற்கும் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்கள் கதாநாயனாக நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் சமூக அவலங்களைக் கண்முன்னே காட்சிப்படுத்தும் கண்ணாடியாக வெளிவந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
திரைக்கதை என்பது பொழுதுபோக்குவதற்கு அல்ல, நல்ல பொழுதாய் ஆக்குவதற்கு என்பதையும் தாண்டி, நாம் வாழும் சமூகத்தில் படர்ந்துள்ள பழுதை நீக்குவதற்கு என்பதை இத்திரைப்படம் மூலம் நிறுவியுள்ளார்கள்.