தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Nora Fatehi Latest Interview About She Developed A Thicker Skin To Survive In Bollywood

Nora Fatehi: ‘அதுக்குதான் தோலை அப்படி வச்சிருக்கேன்.. அது என்ன தொடவே முடியாது’ - நோரா ஃபதேஹி ஓப்பன் டாக்!

Kalyani Pandiyan S HT Tamil
Mar 22, 2024 08:14 PM IST

என்னால் அதையும் செய்ய முடியும், இதையும் செய்ய முடியும். எனக்கு வாய்ப்பு மட்டும் வேண்டும் அவ்வளவுதான். ஆகையால் அதுதான் என் பிரச்சினை. அதனை நான் என்னுடைய தலையில் ஏற்றிக்கொண்டு இருக்கிறேன். அதற்கு நீங்கள் உங்களுக்காக உழைக்க வேண்டும்.

நோரா ஃபதேஹி
நோரா ஃபதேஹி

ட்ரெண்டிங் செய்திகள்

இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்திற்கு பேட்டியளித்த அவர், “ இதைச் சொல்வது கொஞ்சம் கடினமானதுதான். இதற்கான பதிலை ஒரு கோணத்தில் இருந்து மட்டும் சொல்லி விட முடியாது. காரணம் நாம் அவர்களை குறை கூற முடியாது. 

அவர்களுக்கு உங்களைப் பார்ப்பதற்கும், ஆராயவும் நேரம் இல்லாமல் இருக்கிறது. இங்குள்ளவர்கள் தங்களுடைய அடுத்தப்படத்தை எவ்வளவு பெரிய வெற்றிப்படமாக மாற்றலாம். எந்த பெரிய நடிகர்களோடு இணையலாம் என்று யோசிக்கிறார்கள். அவர்களை நான் குற்றம் கூற விரும்பவில்லை. ஆனால் இது நான். இந்தத்துறையை பொறுத்தவரை மக்களுக்கு ஒவ்வொரு முறையும் என்னை நிரூபிப்பதே என்னுடைய வேலை. அதனால்தான் நான் எல்லாவற்றையும் செய்யும் வேலை ஆளாக இருக்கிறேன். 

என்னால் அதையும் செய்ய முடியும், இதையும் செய்ய முடியும். எனக்கு வாய்ப்பு மட்டும் வேண்டும் அவ்வளவுதான். ஆகையால் அதுதான் என் பிரச்சினை. அதனை நான் என்னுடைய தலையில் ஏற்றிக்கொண்டு இருக்கிறேன். அதற்கு நீங்கள் உங்களுக்காக உழைக்க வேண்டும். ஏனென்றால் எந்த நடிகரும், எந்த கலைஞரும் இங்கு முழுக்க முழுக்க சரியானவர் அல்ல.” என்று பேசினார்.

நான் என்னை ஒரு கலைஞராகதான் பார்க்கிறேன். அதனால்தான் நான் பலவற்றை செய்கிறேன். நான் ஆடுகிறேன், பாடுகிறேன், தயாரிக்கிறேன், நடுவராக இருக்கிறேன். இப்படியான வழியில் நான் செல்வதால், இது என்னை மன அழுத்ததில் தள்ளுவதில்லை. நான் செய்தவற்றில் ஏதேனும் ஒர்க் அவுட் ஆக வில்லை என்றாலும் அது என்னை பாதிப்பதில்லை. 

ஆனால் என்னுடைய நண்பர்கள் அவர்களுக்கு ஏதேனும் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால், மன அழுத்தத்தில் சிக்கித்தவிக்கிறார்கள். அவர்கள் திரைப்படங்கள் சரியாக செல்லவில்லை என்றாலும், பாக்ஸ் ஆஃபிஸில் பெரிதாக ஒர்க் அவுட் ஆக வில்லை என்றாலும், அவர்களுக்கு அடுத்த 6 முதல் 8 மாதங்கள் வரை திரைப்படங்கள் கிடைப்பதில்லை. அதனால் அவர்கள் உடைந்து போய் விடுகிறார்கள். நான் அவர்களைப் போல இருக்க விரும்பவில்லை. வாழ்க்கை மிக மிக குறுகியது. உங்களைச் சுற்றி ஒரு ஆரா இருக்க வேண்டும்.

உங்களைப் பற்றி நீங்கள் நேர்மறையாக உணரவேண்டும். நான் இந்த திரைத்துறை, என்னை உடைப்பதை விரும்ப வில்லை. நான் என்னைச் சுற்றி இருக்கும் நேர்மறையான தோலை அடர்த்தியாக வைத்திருக்கிறேன். காரணம் இந்த சோசியல் மீடியா உங்களை கொன்று விடும். எனக்கு நடிப்பது பிடிக்கும். சினிமாதுறை மீது அளவு கடந்த காதல் இருக்கிறது. அதனால்தான் நான் இங்கு வந்து இருக்கிறேன். எனக்கு பிற விஷயங்களை செய்வதற்கும் பிடிக்கும்.

இந்த அணுகுமுறைதான் என்னை இந்தத்துறையில் பாசிட்டிவாகவும், காலத்திற்கு ஏற்றவாறு பொருத்தமானவளாகவும் இருக்க வைக்கிறது. அதனால்தான் இந்தப்பயணத்தில் அவளால் இது முடியும். அவளை முயற்சி செய்து பார்க்கலாம் என்ற நபர்களை என்னால் பெற முடிகிறது. ஆனால் இதற்கு நேரம் எடுக்கும். நீங்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டும்.” என்று பேசினார். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

IPL_Entry_Point

டாபிக்ஸ்