Nayanthara: இது நயன்தாரா வாரம்..! கலக்கப்போகும் படங்கள் என்னென்ன?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Nayanthara: இது நயன்தாரா வாரம்..! கலக்கப்போகும் படங்கள் என்னென்ன?

Nayanthara: இது நயன்தாரா வாரம்..! கலக்கப்போகும் படங்கள் என்னென்ன?

Aarthi V HT Tamil
Aug 14, 2023 12:59 PM IST

கலர்ஸ் தமிழில், நயன்தாரா வாரமாக இந்த வாரம் ஆக்‌ஷன் மற்றும் த்ரில்லர் படங்கள் ஒளிபரப்பாக உள்ளது.

நயன்தாரா
நயன்தாரா

இமைக்கா நொடிகள்

இமைக்கா நொடிகள், 2018 ஆம் ஆண்டு வெளியானது. ஆர். அஜய் ஞானமுத்து எழுதி, இயக்கி சி. ஜெ. ஜெயக்குமாரால் தயாரிக்கப்பட்டது. அதர்வா, நயன்தாரா, அனுராக் காஷ்யப், ராஷி கன்னா ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இத்திரைப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். ருத்ரா என்ற அடையாளம் தெரியாத சில வருடங்களுக்கு முன் சில முக்கிய நபர்களை கொலை செய்திருக்கிறார். அவரைக் கண்டுபிடித்து அழித்துவிட்டதாக அறிவிக்கிறார் காவல்துறை அதிகாரி நயன்தாரா.ஆனால், சிலவருடம் கழித்து அதே பெயரில் அதே குற்றப்பாணியில் ஒருவன் தொடர்கொலைகள் செய்து காவல்துறைக்கு சவால் விடுகிறான் ஒருவன். ஆனால் நயன்தாரா அந்த ருத்ரா வேறு இந்த ருத்ரா வேறு எனக் கூறி தற்கால தொடர்கொலையாளியை அடையாளம் கண்டு அழிக்கிறார். உண்மைக் குற்றவாளி ருத்ரா ஏன் முந்தைய தொடர்கொலைகள் செய்தார்? போலி ருத்ரா தற்கால தொடர் கொலைகளை ஏன் செய்தார் என்பதும் படத்தில் திரைக்கதையாக சொல்லப்படுகிறது.  14 ஆகஸ்ட் இரவு 9:30 மணிக்கு கலர்ஸ் தமிழில் வருகிறது.

நீ எங்கே என் அன்பே

நீ எங்கே என் அன்பே (தெலுங்கு அனாமிகா) வெளியான தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படம், இந்தத் திரைப்படத்தை சேகர் கம்முலா இயக்க, நயன்தாரா, பசுபதி, ஹர்ஷவர்தன் ராணே மற்றும் வைபவ் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் இந்தி மொழியில் வெளியான கஹானி என்ற திரைப்படத்தின் மறு உருவாக்கம் ஆகும். அன்னமிகாவின் சஸ்பென்ஸ், அதிரடி திருப்பங்கள் மற்றும் மர்மங்களை அறிய இந்த புதன்கிழமை (இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும்.

பாஸ்கர் ராஸ்கல்

பாஸ்கர் தி ராஸ்கல் என்பது சித்திக் எழுதி இயக்கிய 2015 ஆம் ஆண்டு தமிழில் டப்பிங் செய்யப்பட்ட மலையாள அதிரடி நகைச்சுவைத் திரைப்படமாகும். இதில் ஜே.டி.சக்கரவர்த்தி, சனூப் சந்தோஷ், அனிகா சுரேந்திரன், ஜனார்த்தனன், கலாபவன் ஷாஜோன், ஹரிஸ்ரீ அசோகன் மற்றும் சஜு நவோதயா ஆகியோரின் துணை நடிகர்களுடன் மம்முட்டி மற்றும் நயன்தாரா நடித்துள்ளனர். தீபக் தேவ் இசையமைத்துள்ள இதற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார், கே.ஆர்.கௌரி சங்கர் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்தப் படம் தமிழில் அரவிந்த் சாமி மற்றும் அமலா பால் நடிப்பில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. கலர்ஸ் தமிழில் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ திரைப்படம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 3) ஒளிபரப்பாகிறது. 

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.