Top 10 Cinema: மீனாட்சி அம்மன் கோயில் சர்ச்சை டூ வாழை வசூல் வரை- டாப் 10 சினிமா செய்திகள்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Top 10 Cinema: மீனாட்சி அம்மன் கோயில் சர்ச்சை டூ வாழை வசூல் வரை- டாப் 10 சினிமா செய்திகள்!

Top 10 Cinema: மீனாட்சி அம்மன் கோயில் சர்ச்சை டூ வாழை வசூல் வரை- டாப் 10 சினிமா செய்திகள்!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 26, 2024 09:03 PM IST

Top 10 Cinema: நமீதா வைத்த குற்றச்சாட்டு முதல் ரஜினிக்கு துரைமுருகன் கொடுத்த பதிலடி வரை என இன்றைய கோலிவுட் டாப் 10 சினிமா செய்திகளை பார்க்கலாம்.

Top 10 Cinema: மீனாட்சி அம்மன் கோயில் சர்ச்சை டூ வாழை வசூல் வரை-  டாப் 10 சினிமா செய்திகள்!
Top 10 Cinema: மீனாட்சி அம்மன் கோயில் சர்ச்சை டூ வாழை வசூல் வரை- டாப் 10 சினிமா செய்திகள்!

2.இத்தாலியில் நடந்த எமி ஜாக்சன் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார் இயக்குநர் ஏ.எல்.விஜய்!

வாழ்நாள் முழுவதும் சிரிப்பு

இதுதொடர்பாக இயக்குநர் விஜய் பகிர்ந்திருக்கும் வாழ்த்துச் செய்தியில், “அன்புள்ள எமி மற்றும் எட், உங்கள் அழகான திருமணத்திற்கு வாழ்த்துகள்! இரண்டு அற்புதமான இதயங்கள் ஒன்றிணைந்த அழகான இந்தத் திருமணத்தில் நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சி. 

உங்கள் இருவருக்கும் வாழ்நாள் முழுவதும் சிரிப்பு மற்றும் முடிவில்லாத மகிழ்ச்சி நிலைத்து இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இருவரும் ஒன்றாக இணைந்து வாழும் அற்புதமான வாழ்க்கை இன்றில் இருந்து தொடங்கி இருக்கிறது!’ எனத் தனது அன்பை அதில் வெளிப்படுத்தி இருக்கிறார்.

 

விஜய்
விஜய்

வாழை வசூல் எவ்வளவு?

3.மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வாழை. சிறுவயதில் தான் சந்தித்த அனுபவங்களின் தொகுப்பை கதையாக மாற்றி, இந்தப்படத்தில் அவர் காட்சிகளாக வைத்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இந்தப்படம், தற்போது மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

Sacnilk தளம் வெளியிட்டு இருக்கும் தகவலின் படி, முதல் நாளில் 1.15 கோடி வசூல் செய்த வாழைத்திரைப்படம், இரண்டாவது நாளில் 2.50 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமையான நேற்று 4 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இதன் மூலம் வாழை திரைப்படம் மூன்று நாட்களில் 7.65 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. உலகளவில் வாழை திரைப்படம் 8.8கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது.

கங்குவா திரைப்படம் ஒத்திவைப்பு

4. வரும் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்த நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள கங்குவா திரைப்படம், தேதி குறிப்பிடாமல் வைக்கப்பட்டி இருப்பதாகவும், இந்தப்படம் நவம்பர் மாதம் ரிலீஸ் ஆகலாம் என்று கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகி இருக்கிறது.

 

கங்குவா
கங்குவா

5.யுவன் விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் தி கோட் படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். இந்தத்திரைப்படம் அடுத்த மாதம் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தத்திரைப்படத்தில் இருந்து யுவன் இசையில் வெளியான பாடல்கள் எதிர்மறை விமர்சனங்களை பெற்றன. யுவனையும் நெட்டிசன்கள் சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்தனர். 

இதற்கு பதில் அளித்த அவர், “பேசுகிற வாய் பேசிக் கொண்டே தான் இருக்கும், நாம் நடந்து கொண்டே இருக்க வேண்டும். எதையும் காதில் போட்டுக் கொள்ளக்கூடாது. எதிர்மறை எண்ணங்கள் உங்களை வீழ்த்த முயற்சித்துக் கொண்டே இருக்கும். ஆனால் நீங்கள் அவை எதற்கும் செவி சாய்க்கக்கூடாது.

வாயைக்கொடுத்து மாட்டிக்கொண்ட ரஜினி

6.எ.வ வேலு எழுதிய கலைஞர் குறித்தான புத்தகவெளியீட்டு விழாவில் துரைமுருகனை பற்றி நடிகர் ரஜினி பேசிய நிலையில் வயதாகி, பல்லுப்போன, நடிகர்கள் எல்லாம் இன்னும் நடிப்பதால் தான் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லாமல் போகிறது என அமைச்சர் துரைமுருகன், புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு பதிலடி கொடுத்தார். இதற்கு துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர் அவர் என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று கூறினார்.

7.தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கக்கூடிய நடிகர் விஜய்யின் 68 ஆவது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'. இதனை சுருக்கமாக 'தி கோட்' என்று அழைக்கிறார்கள். இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன், ஜெயராம், வைபவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப்படத்தின் புரமோஷன் வேலைகள் ஒருபக்கம் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், படத்தில் இருந்து ஸ்பெஷல் பாடல் ஒன்று வெளியாகும் என்றும் அதில் த்ரிஷா இருப்பார் என்றும் சொல்லப்படுகிறது.

8. அரசியல் களத்தில் நேரடியாக இறங்கி இருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக்கழகத்தின் கொடியை அண்மையில் அறிமுகம் செய்து வைத்தார். அதற்காக பிரத்யேக பாடல் ஒன்றும் வெளியானது. இந்த நிலையில் அவருக்கு ராகவா லாரன்ஸ் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து இருக்கின்றனர்.

9. கொட்டுக்காளி ஆடியோ லான்சில் தனுஷை, சிவகார்த்திகேயன் மறைவாக விமர்சித்த நிலையில், அது சர்ச்சையானது. இந்த சர்ச்சைக்கும் பிறகு தனுஷூம், சிவாவும் ஒரே நிகழ்ச்சியில் அருகருகில் நின்று கொண்டிருந்த போட்டோ வைரல் ஆனது.

10. தங்கலான் திரைப்படம் உலகளவில் 60 கோடியை தாண்டி இருக்கிறது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.