HBD Anirudh: சினிமாவை புரட்டி போட்ட இசை.. இளம் தலைமுறையை ஆளும் அனிருத்
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இன்று தனது 33 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

தமிழ் சினிமாவில் எத்தனையோ கலைஞர்கள் தனது திறமையால் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளனர். அந்த வகையில் தற்போது தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக தனது கால் தளத்தை பதித்தவர் அனிருத் ரவிச்சந்தர்.
கலைத்துறையை அடிப்படையாகக் கொண்டு விளங்கிய குடும்பத்திலிருந்து வந்தவர் தான் இந்த அனிருத். இவருடைய தந்தை ரவி ராகவேந்தர் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் ஆவார். விசுவின் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார்.
எளிதாக வரக்கூடிய இடத்தில் அனிருத் இருந்திருந்தாலும் அவ்வளவு எளிதில் இந்த தமிழ் சினிமா வாய்ப்புகள் கொடுத்து விடுமா என்ன. தனது இளம் வயதிலேயே இசைக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டவர் அனிருத். கல்வி பயின்று கொண்டிருக்கும் பொழுதே இசைக்காக நேரம் ஒதுக்கி அதிக ஈடுபாடு பல்வேறு நிகழ்ச்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்.