HBD Vijay Antony : பியா பியா, சாத்திக்கடி போத்திக்கடி.. அந்த வைப் தான் ஹைலைட்.. விஜய் ஆண்டனி பிறந்தநாள் இன்று!
இவர்'சைத்தான்', 'யமன்', 'அண்ணாதுரை', 'காளி', 'திமிரு புடிச்சவன்' , 'பிச்சைக்காரன் 2’,’கொலை, போன்ற படங்களில் நடித்துள்ளார். மிகச் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார் நடிகர் விஜய் ஆண்டனி.
நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடகர் என பன்முக திறமையுடன் தொடர்ந்து பல ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்பட்டு வருபவர் விஜய் ஆண்டனி.
இவர் தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ விரைவில் வெளியாக உள்ளது. இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் சார்பில் தனஞ்செயன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் சத்யராஜ், சரத்குமார், கன்னட நடிகர் டாலி தனஞ்செயா என பெரும் நட்சத்திரப் பட்டாளம். சமீபத்தில் வெளியான இதன் டிரெய்லர் வரவேற்பைப் பெற்றது.
ஒலிப் பொறியாளராகப் பணி
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஜூலை 24ஆம் தேதி 1975 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் 1975 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை இவருக்கு 7 வயது இருக்கும் போது இறந்து விட்டார். இவர் பண்டைய எழுத்தாளர் மாயூரம் வேத நாயகம் பிள்ளை அவர்களின் கொள்ளுப் பேரன் ஆவார்.
விஜய் ஆண்டனி துவக்கத்தில் ஒலிப் பொறியாளராகப் பணி புரிந்து பின்னர் இசையமைப்பாளரானார். தமது கல்லூரிப் படிப்பை முடித்தப் பின்னர் தாமே ஆடியோ பைல்ஸ் என்ற ஒலியரங்கை நிறுவினார். அங்கு ஒலி பொறியாளராக சோதனைகள் செய்து தொலைக்காட்சிகளுக்கும் ஆவணப்படங்களுக்கும் சில jingles அமைத்தார்.
அப்போது ஆஸ்கார் ரவிச்சந்திரன் தமது டிஷ்யூம் என்ற திரைப்படத்திற்கு இசையமைக்க அழைத்தார். ஆனால் விஜய் இசையமைத்த முதல் திரைப்படமாக சுக்ரன் திரைப்படம் முதலில் வெளிவந்தது. தமது இசையமைப்பில் பல புதுமுக பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுப்பவர் என்ற பெருமை உடையவர் இவர்.
அந்த வைப் தான் ஹைலைட்
'டிஷ்யூம்', 'நான் அவனில்லை', 'நினைத்தாலே இனிக்கும்' போன்ற படங்களில் விஜய் ஆண்டனியின் பாடல்கள் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தன. விஜய் ஆண்டனியின் பாடல் தனித்துவமாக இருக்கும். முக்கியமாக இவரின் அனைத்து பாடல்களிலும் அந்த வைப் தான் ஹைலைட். இதையாராலும் மறுக்க முடியாது. அது குத்துபாடல்களாக இருந்தாலும் சரி மொலோடி பாடலாக இருந்தாலும் சரி அதனை அவர் பாணியில் கொடுத்து அசத்தி இருப்பார்.
அனைவரையும் மயக்கி இருப்பார்
இவரின் பாடல்களான, மஸ்காரா போட்டு மயக்குறியே, ஹேய் கிட்ட நெருங்கி வாடி கர்லா கட்டை உடம்புக்காரி, காதலிக்க பென் ஒருத்தி பார்த்து விட்டேன, ஒரு சின்ன தாமரை, இச்சி இச்சி இச்சி கொடு, பியா பியா, சாத்திக்கடி போத்திக்கடி பத்திரமா படுத்துக்கடி போன்ற பல வைப் சாங் கொடுத்து அசத்தியுள்ளார்.
நகுல், சுனைனா நடித்த காதலில்' விழுந்தேன் படத்தில் அனைத்துப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. படத்தின் வெற்றிகு இவரின் பாடல்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. அதில் 'அட்ரா அட்ரா நாக்குமுக்க' என்னும் குத்துப் பாடல் 'உனக்கென நான் எனக்கென நீ' என்னும் மெலடிப் பாடல் 'தோழியே என் காதலியா' என்னும் டூயட் பாடல்கள் கொடுத்து அனைவரையும் மயக்கி இருப்பார்.
அடுத்ததாக விஜய் நடித்த 'வேட்டைக்காரன்', விஜய்யுடன் மீண்டும் இணைந்த 'வேலாயுதம்' படத்திலும், தனுஷ் நடித்த 'உத்தமபுத்திரன்', விஷால் நடித்த 'வெடி', 'அங்காடித் தெரு', 'அவள் பெயர் தமிழரசி' போன்ற படங்களுக்கும் சிறப்பான இசையை வழங்கினார்.
சிறந்த நடிகர்
இவை சிறந்த இசையமைப்பாளர் என்பதை தாண்டி சிறந்த நடிகர் என்ற பெயரையும் பெற்றுள்ளார். இவர் நடிகராக நடித்த முதல் படம் 'நான்’. 2012இல் வெளியான 'நான்' திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இப்படம் விமர்சகர்களின் பாராட்டையும் வணிக வெற்றியையும் பெற்றது.
பின்னர் இவர் நடித்த 'சலீம்' திரைப்படமும் ஹிட் ஆனது.பின்னர் தான் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே இசையமைக்கிறார். விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் என்னும் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி தயாரிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படத்தில் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துக்கொண்டார்.
விஜய் ஆண்டனியின் பிறந்தநாள்
'பிச்சைக்காரன்' மிகப் பெரிய வணிக வெற்றியையும் விமர்சகர்களின் பாராட்டையும் குவித்தது. இந்தப் படத்தின் தெலுங்கு மொழிமாற்ற வடிவமான 'பிச்சகாடு' வசூல் சாதனை புரிந்தது. தெலுங்கு சினிமாவிலும் விஜய் ஆண்டனி படங்களுக்கு ஒரு மார்க்கெட் உருவானது.
இவர்'சைத்தான்', 'யமன்', 'அண்ணாதுரை', 'காளி', 'திமிரு புடிச்சவன்' , 'பிச்சைக்காரன் 2’,’கொலை, போன்ற படங்களில் நடித்துள்ளார். மிகச் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து தொடர் வெற்றிகளை கொடுத்து வருகிறார் நடிகர் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகத் திறன் கொண்ட விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் இன்று. அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்