அடேங்கப்பா.... பிரமிக்க வைக்கும் அளவுக்கு போடப்பட்ட செட்கள்
நாம் ஆச்சரியப்படும் வகையில் பல படங்களில் விதவிதமாக செட் போட்டு இயக்குநர்கள் நம்மை ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் பிரமிக்க வைக்கும் அளவுக்கு போடப்பட்ட செட்கள் குறித்து இதில் காண்போம்.
தமிழ் சினிமாவில் வரும் பல படங்களில் நாம் ஆச்சரியப்படும் வகையில் பல விதமான இடங்கள் தோன்றுகிறது. அதில் பல இடங்கள் செட்ட தான் போடப்பட்டிருக்கிறது. பார்ப்பதற்கு செட் போல் இல்லாமல் ரீயலாக இருப்பது தான் அவர்களின் வெற்றியே.
பாகுபலி
பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன்,சத்யராஜ் நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் பாகுபலி . இப்படத்தின் செட் ஹைதராபாத்தில் பிரம்மாண்ட அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு மேல் படப்பிடிப்பும் நடந்தது. படத்திற்காகப் போடப்பட்ட செட்டை இன்று வரை சுற்றுலாப் பயணிகள் சென்று பார்வையிடுகின்றனர்.
லிங்கா
ரஜினிகாந்த் நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் லிங்கா. இப்படத்தில் ஒரு அணை, ரயில் நிலையம், கோயில், ஒரு அரண்மனை ஆகியவை செட்டாக போடப்பட்டது. இந்த செட்டை போடுவதற்கு மட்டும் 21 நாட்களில் ஆயிரத்து 500 நபர்கள் பணியாற்றியுள்ளனர். கிட்டத்தட்ட 200 மீட்டர் நீளமும், 25 அடி உயரமானது. அணையை ஏற்கனவே கட்டி முடித்து விட்டு, கொஞ்சம் கொஞ்சமாகப் பிரித்து படமாக்கியுள்ளனர் படக்குழு.
காக்க காக்க
இயக்குநர் கெளதம் மேனனின் இரண்டாவது படம் காக்க காக்க. சூர்யா, ஜோதிகா திருமணம் செய்வதற்கு முன்பு வெளியான இப்படம் பலரது விருப்பமான ஒன்றாக உள்ளது. படத்தின் சிறப்பு அம்சமே அதில் இடம்பெற்றிருக்கும் வீடு தான்.
வீட்டில் என்ன சிறப்பு அம்சம் இருக்கிறது என நீங்கள் கேட்கலாம் ஆற்றின் நடுவே மரத்தால் செய்யப்பட்ட வீடு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அதை படக்குழு ஸ்ரீலங்கா சென்று செட்டாக போட்டுள்ளனர். 24 அடி உள்ள தண்ணீரிருக்கு அடியில் இருக்கும் இந்த செட்டை 21 நாள்களில் போட்டுள்ளனர்.
வட சென்னை
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் வட சென்னை. இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு இப்படம் வட சென்னையை மையமாக கொண்டு உருவானது. இப்படத்திற்குப் பழமை வாய்ந்த ஜெயில் தேவை என்பதால் 300 நபர்கள் இணைந்து 48 நாள்களில் செட்டாக போட்டனர்.
காலா
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் காலா. இந்தியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான மும்பை தாராவி பகுதியை அரங்கமாகச் சென்னையில் உருவாக்கினர். தமிழ் மக்கள் அதிகம் வாழும் பகுதி இதுவாகும்.
அங்குதான் காலா பட படப்பிடிப்பு நடைபெற்றது. தாராவி பகுதியில் இருக்கும் அனைத்து அமசங்களும் இடம்பெற்றதால் உண்மையிலேயே படம், மும்பையின் எடுக்கப்பட்டதா என படம் வெளியான சமயத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.
அதுமட்டுமில்லாமல் படத்தில் ரஜினி பாலம் மேல் சண்டை போடும் காட்சியும் செட்டாக அமைக்கப்பட்டிருந்தது.
பேட்ட
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 165 ஆவது படம் 'பேட்ட'. இப்படத்தில் உள்ள 'உள்ளல்லா' பாடல் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட்டாக உள்ளது.
டார்ஜிலிங்கில் பாடலின் சில காட்சிகள் எடுக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களால் எடுக்கப்படாமல் இருந்த காட்சிகளை மீண்டும் சென்னையில் டார்ஜிலிங்கில் உள்ள விடுதி, கல்லூரி போல் செட் போட்டு படக்குழுவினர் எடுத்தனர்.