HBD S.D. Burman: மிகவும் வெற்றிகரமான செல்வாக்கு மிக்க இந்திய திரைப்பட இசையமைப்பாளர் எஸ்.டி.பர்மன் பிறந்த நாள் இன்று
கலைத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவித்துள்ளது.
புகழ்பெற்ற இசையமைப்பாளரும் பாடகருமான எஸ்.டி.பர்மன் பிறந்த நாள் இன்று. திரிபுரா அரச குடும்பத்தைச் சேர்ந்த இவர், 1937 ஆம் ஆண்டில் பெங்காலி திரைப்படங்களில் தனது இசைப் பயணத்தைத் தொடங்கினார். பின்னர் அவர் இந்தி திரைப்படங்களுக்கு இசையமைக்கத் தொடங்கினார்.
மிகவும் வெற்றிகரமான மற்றும் செல்வாக்குமிக்க இந்திய திரைப்பட இசையமைப்பாளர்களில் பரிணமித்தார். பர்மன் பெங்காலி திரைப்படங்கள் மற்றும் இந்தி உட்பட 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒலிப்பதிவுகளை அமைத்தார்.
பன்முக இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், வங்காளத்தின் செமி-கிளாசிக்கல் மற்றும் நாட்டுப்புற பாணியிலும் பாடல்களைப் பாடினார். இவரது மகன் ஆர்.டி.பர்மனும் பாலிவுட் படங்களுக்கு புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருந்தார்.
கிஷோர் குமார், லதா மங்கேஷ்கர், முகமது ரஃபி, கீதா தத், மன்னா டே, ஹேமந்த் குமார், ஆஷா போஸ்லே, ஷம்ஷாத் பேகம், முகேஷ் மற்றும் தலாத் மஹ்மூத் உள்ளிட்ட சகாப்தத்தின் முன்னணி பாடகர்கள் இவரது இசையில் பாடியிருக்கின்றனர்.
கலைத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்பை சிறப்பிக்கும் வகையில் இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவித்துள்ளது.
ஆசிய பிலிம் சொசைட்டி அவார்டு, தேசிய விருது, பத்ம ஸ்ரீ விருது, பிலிம்ஃபேர் விருதுகள் உள்ளிட்டவற்றை இவர் பெற்றிருக்கிறார். அக்டோபர் 31ம் தேதி மும்பையில் காலமானார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்