அதிக பில்டப் கொடுக்கப்பட்டு அட்ரஸ் இல்லாமல் போன படங்கள்! பக்கா லிஸ்ட் இதோ!
மக்களுக்கான பொழுதுபோக்காவும் மிகப் பெரிய தொழில் நிறுவனமாகவும் இந்திய சினிமா இருந்து வருகிறது. இந்திய சினிமாவில் ஒரு ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான படங்கள் வெளியாகின்றன.
மக்களுக்கான பொழுதுபோக்காவும் மிகப் பெரிய தொழில் நிறுவனமாகவும் இந்திய சினிமா இருந்து வருகிறது. இந்திய சினிமாவில் ஒரு ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான படங்கள் வெளியாகின்றன. இருப்பினும் சில படங்கள் மட்டுமே மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்து காலத்திற்கும் நினைவில் இருக்கின்றன. மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என பெரிய பொருட் செலவிலும் பெரிய ஹீரோக்களை வைத்தும் எடுக்கப்பட்ட படங்களும் படுதோல்வி அடைந்த வரலாறும் இந்திய சினிமா வரலாற்றில் உண்டு.
எந்தவித பெரிய ஹீரோக்கள் இல்லாமல் சிறிய பொருட் செலவில் நல்ல கதை அம்சத்துடன் எடுக்கப்பட்ட சிறிய படங்களும் பல கோடி வசூலை பெற்றுள்ளன. இந்திய சினிமா என்பது பெரிய ஹீரோக்களை நம்பியோ, பிரம்மாண்டமான பட உருவாக்கத்தை நம்பியோ இல்லை. சிறப்பான கதையம்சம் விறுவிறுப்பான திரைக்கதை என ரசிகர்களை அந்த மூன்று மணி நேரம் திருப்தி படுத்தினால் போதும்.
ஓவர் புரோமோசன் கொடுக்கப்பட்ட படம்
ஒரு திரை உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நபரின் படம் வெளியானால் அப்படத்திற்கான பிரமோஷன் நிகழ்வு என்பது மிகவும் பிரம்மாண்டமாக இருப்பது வழக்கம். இந்த வரிசையில் முக்கியமான இடத்தை பிடிப்பது தெலுங்கு நடிகரான விஜய் தேவர் கொண்டாவின் லைகர் படம். இப்படம் வெளியாவதற்கு முன்பு இப்பட குழுவினர் பல ஊர்களுக்கு சென்று இதன் புரமோஷனை மிகவும் பிரம்மாண்டமாக நடத்தினர். மேலும் இப்படம் நிச்சயமாக 200 கோடி வசூல் பெரும் என அப்படத்தின் கதாநாயகனே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
இருப்பினும் இப்படம் 125 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் வெறும் 60 கோடியை மட்டுமே வசூல் செய்தது. படம் வெளியாகி ஒரு சில தினங்களுக்கு அடுத்து பின்னர் திரையரங்குகள் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டன. விஜய தேவர் கொண்டாவின் பட ப்ரமோஷன் விழாவில் பேசிய வீடியோக்கள் ட்ரோல் செய்யப்பட்டு சமூக அது வலைதளங்களில் வெளியிடப்பட்டன.
தி லேடி கில்லர்
தயாரிப்பாளர் போனி கபூரின் மகனான அர்ஜுன் கபூர் கடந்த ஆண்டு, அஜய் பஹ்லின் இயக்கத்தில், காதலும் த்ரில்லரும் கலந்த 'தி லேடி கில்லர்' எனும் படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக பூமி பெட்னேகர் நடித்துள்ளார். இந்தப் படத்தை சுமார் 45 கோடி பட்ஜெட்டில் டி- சீரிஸ் கம்பெனி தயாரித்தது.
இந்நிலையில், பாலிவுட் வரலாற்றிலேயே ஒரு படம் மோசமான வசூலைப் பெற்றது என்றால் அது இந்தப் படம் தான் என தகவல்கள் பரவி வருகின்றன. காரணம், 45 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம், திரையரங்களில் வெளியாகி வெறும் 60 ஆயிரம் ரூபாயை மட்டுமே வசூலித்துள்ளது என்பது தான்.
ராம் சேது
நடிகர் அக்ஷய் குமார் மற்றும் ஜாக்லின் பெர்னாண்டஸ் உட்பட பலர் நடித்து வெளியான திரைப்படம் ராம்சேது. இது 2022 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தினை இயக்குனர் அபிஷேக் ஷர்மா இயக்கி இருந்தார் இப்படத்திற்கான புரமோஷன் பல மாநிலங்களில் பலவிதமாக நடைபெற்றது. வரலாற்று பின்னணி கொண்ட கதைக்களத்துடன் இப்படம் உருவாகி இருப்பதாக படக்குழுவினர் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பேசி வந்தனர். இப்படம் பிரம்மாண்டமாக 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இப்படம் வெளியான பின் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. ரசிகர்களிடத்தில் ஏமாற்றத்தையே அளித்த திரைப்படம் மொத்தமாக 92 கோடி மட்டுமே வசூல் செய்தது. இது படத்தின் பட்ஜெட்டை விட மிகவும் குறைவான வசூல் ஆகும்.
டாபிக்ஸ்