Wayanad: கர்னலாக இராணுவ உடையில் வந்த லால்.. “நேரில் வந்து பார்த்தால்தான் நிலைமை தெரியும்” - மோகன்லால் பேட்டி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Wayanad: கர்னலாக இராணுவ உடையில் வந்த லால்.. “நேரில் வந்து பார்த்தால்தான் நிலைமை தெரியும்” - மோகன்லால் பேட்டி!

Wayanad: கர்னலாக இராணுவ உடையில் வந்த லால்.. “நேரில் வந்து பார்த்தால்தான் நிலைமை தெரியும்” - மோகன்லால் பேட்டி!

Kalyani Pandiyan S HT Tamil
Aug 03, 2024 03:45 PM IST

Wayanad: இராணுவம், கடற்படை, விமானப்படை, என்.டி.ஆர்.எஃப், தீயணைப்பு மற்றும் மீட்பு மற்றும் பிற அமைப்புகள், உள்ளூர்வாசிகள் போன்றோர் மீட்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருந்து உதவி வருகிறனர் - மோகன்லால் பேட்டி!

Wayanad: கர்னலாக  இராணுவ உடையில் வந்த மோகன்லால்.. “நேரில் வந்து ந்து பார்த்தால்தான் நிலைமை தெரியும்” - மோகன்லால் பேட்டி!
Wayanad: கர்னலாக இராணுவ உடையில் வந்த மோகன்லால்.. “நேரில் வந்து ந்து பார்த்தால்தான் நிலைமை தெரியும்” - மோகன்லால் பேட்டி!

முதற்கட்டமாக, மேப்பாடியில் உள்ள ராணுவ முகாமை அடைந்த அவர், அங்கு இருந்த அதிகாரிகளுடன் சிறிது நேரம் கலந்துரையாடிவிட்டு, மற்றவர்களுடன் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு புறப்பட்டுச் சென்றார். அவர் சூரல்மலா, முண்டக்கை மற்றும் புஞ்சிரமட்டம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று, ராணுவம் மற்றும் உள்ளூர் மக்கள் உட்பட பல்வேறு மீட்புப் பணியாளர்களுடன் உரையாடி, சம்பவத்தின் தீவிரத்தை அறிந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மோகன்லால் பேரழிவின் தீவிரத்தை அதை நேரில் பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்றார்.

மோகன்லால் பேட்டி 

அவர் பேசும் போது, "நிலச்சரிவின் அளவை நேரடியாக நேரில் பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். இராணுவம், கடற்படை, விமானப்படை, என்.டி.ஆர்.எஃப், தீயணைப்பு மற்றும் மீட்பு மற்றும் பிற அமைப்புகள், உள்ளூர்வாசிகள் போன்றோர் மீட்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இருந்து உதவி வருகிறனர்"என்று அவர் கூறினார்.

3 கோடி நிதி உதவி உறுதி!

மேலும் பேசிய அவர், “நான் கர்னலாக இருக்கும் இந்திய ராணுவத்தின் 122 காலாட்படை பட்டாலியன்தான் பாதிக்கப்பட்ட இடத்தை முதலில் அடைந்தது. நானும் ஒரு அங்கமாக இருக்கும் விஸ்வசாந்தி அறக்கட்டளை, இங்குள்ள மறுவாழ்வு பணிகளுக்காக ரூ 3 கோடி நன்கொடை அளிக்க முடிவு செய்துள்ளது தேவைப்பட்டால் அதிக நித தருவதற்கும் தயாராக இருக்கும். " என்று மோகன்லால் கூறினார். 

இதற்கிடையில், மோகன்லாலுடன் வந்த திரைப்பட இயக்குநர் மேஜர் ரவி, இந்த அறக்கட்டளை பாழடைந்த முண்டக்காயம் பள்ளியையும் மீண்டும் கட்டும்வோம் என்று பேசினார். கடந்த 2009ம் ஆண்டு மோகன்லாலுக்கு இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

முன்னதாக, கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் தொடா் கனமழை காரணமாக, கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூலை 30) அதிகாலை 2 பெரும் நிகச்சரிவுகள் ஏற்பட்டன. எதிர்பாராமல் நடந்த இந்த நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட பல மலைக் கிராமங்களில் தூங்கிக்கொணிருந்த மக்கள் மண்ணுக்குள் சென்று உயிரிழந்தனர். அதன் எண்ணிக்கை 340 என்று தற்போது வரை வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மாயமானவர்களின் மொபைல் போன்களில் கிடைக்கும் ஜிபிஎஸ் சிக்னல்’ மூலமாக அவர்களின் இருப்பிடத்தைக்கண்டறிந்து, மோப்ப நாய்களின் உதவியுடன் இறந்தவர்களின் உடல்களை மீட்டு வருகின்றனர்.  கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது சொந்தப் பணத்தில் ரூ.1 லட்சத்தை முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். அதேபோல் அவரது மனைவி கமலா ரூ.33,000 வழங்கியுள்ளார். முன்னதாக தமிழ்நாட்டில் இருந்து அரசு சார்பில், நிவாரண நிதியாக 8 கோடி வழங்கப்பட்டது. நடிகர்கள் சூர்யா, விக்ரம், கார்த்தி, ஜோதிகா, நயன்தாரா உள்ளிட்டோரும் கேரளவிற்கு நிதியுதவி அளித்து இருக்கின்றனர். 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.