Meenakshi Ponnunga : ஆதாரத்துடன் சிக்கிய பூஜா.. ஷக்தி எடுத்த சபதம், நடந்தது என்ன?
மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் குறித்து காண்போம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ஷக்தி காட்டிய வீடியோ ஆதாரத்தால் பூஜா அதிர்ச்சி அடைந்தாள்.
இதனை தொடர்ந்து இன்றைய எபிசோடில் சக்தி வீட்டிற்கு அழைத்து வந்த நர்சை விசாரிக்க ரிப்போர்ட் தவறாக மாறிவிட்டது என்றும் பூஜா என்னுடைய தோழி எனவே எதார்ச்சையாக தான் சந்தித்தோம் அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று சொல்கிறாள்.
அதனை தொடர்ந்து ரங்கநாயகி சகுந்தலாவை எச்சரித்து சரண்யாவின் வயிற்றில் வளர்வது அசோக்கின் குழந்தை தான் என்று கூறி ,சரண்யாவை அனுப்ப மறுக்கிறாள். ஆனால் சரண்யா அசோக்குடன் சென்று விடுகிறாள். அதன் பிறகு சக்தி பூஜாவை சந்தித்து உனக்கு கல்யாணம் செய்து வைத்து இந்த வீட்டை விட்டு வெளியேற்றுவேன் என்று சபதம் போடுகிறாள்.
இதனை தொடர்ந்து சகுந்தலாவின் வீட்டிற்கு சென்ற வெற்றி சகுந்தலாவை குச்சியால் அடித்து எச்சரிக்கிறான். அடுத்ததாக கோவிலில் கொடியேற்று விழா நடத்துகிறார்கள். முதல் மரியாதை பரிவட்டம் நீதிமணி மனைவி மீனாட்சிக்கு தான் தர வேண்டும் என்று ஊர்க்காரர்கள் பேச ,அப்போது அங்கே வந்த புஷ்பா நானும் நீதிமணி மனைவி தான் என்று என்று சொல்லி எனக்குத் தான் பரிவட்டம் கட்ட வேண்டும் என்று பிரச்சனை செய்கிறாள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்