Meenakshi Ponnunga: தீ விபத்தில் உயிரிழந்த மீனாட்சி? வீட்டுக்கு வந்த அஸ்தி
மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சக்தி கொடுத்த டிரஸ்சை வெற்றி கிழித்து எறிந்து விடுகிறான். பிறகு சாட்ஸுடன் மீனாட்சி மெஸ்ஸுக்கு வருகிறான்.
அங்கே சாட்சுடன் வெற்றியை பார்த்த சாந்தா வெட்கப்பட்டு வெற்றிக்கு டிரஸ் கொடுக்கிறாள். பிறகு மீனாட்சி வரும் விஷயத்தை சொல்ல வெற்றி சந்தோஷப்படுகிறான்.
மேலும் யமுனா, துர்கா, சக்தி, வெற்றி என அனைவரும் கல் கோயிலில் மீனாட்சி நல்ல முறையில் வீட்டுக்கு வர வேண்டும் என்று சாமி கும்பிடுகிறார்கள்.
அதனை தொடர்ந்து நீதிமணி மீனாட்சியை பார்ப்பதற்காக புது டிரஸ் எல்லாம் அணிந்து கொண்டு பரபரப்பாக கிளம்ப அதை புஷ்பா பார்த்துவிட்டு நீதிமணியை திட்டுகிறாள்.
மீனாட்சி வீட்டில் சாந்தா ஆரத்தி கலக்கி வைத்துக் கொண்டு மீனாட்சியை வரவேற்க காத்துக் கொண்டிருக்க ஒரு கார் வருகிறது. காரில் இருந்து ஒருவர் இறங்கி வந்து இது மீனாட்சி வீடா என கேட்டு உறுதி செய்ய பிறகு மற்றொருவர் ஒரு அஸ்தி கலசத்தை கொண்டு வந்து கொடுக்க, சாந்தாவும் சக்தியும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
ஒரு பையில் மீனாட்சியின் டிரஸ்ஸை கொடுத்துவிட்டு, மீனாட்சி ஒரு தீ விபத்தில் இறந்து விட்டார்கள் என்று கூற அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: