Meenakshi Ponnunga: தேர்வுக்கு கிளம்பிய ஷக்தி.. பூஜாவின் சதியால் வந்த சிக்கல்
மீனாட்சி பொண்ணுங்க சீரியலின் இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மீனாட்சி பொண்ணுங்க.
இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சக்தி தேர்வுக்கு கிளம்பிக் கொண்டிருக்க, துர்கா, சாந்தா, யமுனா என அனைவரும் சக்திக்கு சாப்பாடு ஊட்டி அவளை தேர்வுக்கு வழி அனுப்புகிறார்கள்.
பிறகு வெற்றி சக்தியை தேர்வுக்கு அழைத்து செல்வதற்காக வருகிறான். வெற்றி செல்வதை பார்த்துவிட்டு பூஜா சங்கிலிக்கு தகவல் சொல்கிறாள். சங்கிலி நான் தயாராக இருக்கிறேன் என்று கூறுகிறான்.
அடுத்து வெற்றி சக்தியின் வீட்டிற்கு வந்து சக்தியை தேர்வுக்கு அழைத்துச் செல்கிறான். வெற்றியும் சக்தியும் சந்தோஷமாக பேசிக்கொண்டு வர, அவர்கள் வரும் வழியில் ஆணியை போட்டு வைத்து காத்துக் இருக்கின்றனர்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்