Meenakshi Ponnunga: கிழிய போகுது பூஜாவின் முகத்திரை.. மீனாட்சி பொண்ணுங்க எபிசோட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Meenakshi Ponnunga: கிழிய போகுது பூஜாவின் முகத்திரை.. மீனாட்சி பொண்ணுங்க எபிசோட்

Meenakshi Ponnunga: கிழிய போகுது பூஜாவின் முகத்திரை.. மீனாட்சி பொண்ணுங்க எபிசோட்

Aarthi V HT Tamil
Feb 20, 2023 01:30 PM IST

மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட் பார்க்கலாம்.

மீனாட்சி பொண்ணுங்க
மீனாட்சி பொண்ணுங்க

அடுத்து சரண்யாவும் வெற்றியும் பூஜாவின் ரூமில் பத்திரத்தை தேட, பூஜா அதை பார்த்து விடுகிறாள். அடுத்து யாருக்கும் தெரியாமல் அவளா பத்திரத்தை எடுத்து காலண்டரில் மறைத்து வைக்கிறாள்.

மறுபக்கம் யமுனா போன் செய்து சக்திக்கு ஆறுதல் சொல்லி, பத்திரம் கிடைத்ததா என்று விசாரிக்கிறாள். இந்த நிலையில் பூஜா சக்தி இடத்திற்கு வந்து வேண்டுமென்றே அவளிடம் வம்பு செய்ய, இந்த சக்தியை யாரும் ஜெயிக்க முடியாது என்று சக்தியும் பூஜாவுக்கு சவால் விடுகிறாள்.

அடுத்து வீட்டில் நடந்த பிரச்சனையால் வெற்றி வேலைக்குப் போக இருப்பதாக திடியனிடம் சொல்ல அவன் ரங்கநாயகியின் மகனுக்கு இந்த ஊரில் யாரும் வேலை கொடுக்க மாட்டார்கள் என்று திடியன் கூறுகிறான்.

அதன் பிறகு யமுனாவும் கார்த்திக்கும் கோயிலில் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது கோகிலா கூடுதலாக நகை கேட்ட விஷயத்தை யமுனா கார்த்திக்கிடம் சொல்லி விடுகிறாள். புஷ்பாவை சந்தித்து பூஜா பத்திரம் கொடுத்ததை திடியன் வீடியோ எடுத்து விஷயத்தை சொல்லி, சக்திக்கு அனுப்பி வைக்கிறான். வீடியோவை பார்த்த சக்தி தைரியமாக திமிராக மிடுக்குடன் ரங்கநாயகியின் வீட்டுக்குள் அடி எடுத்து வைக்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பார்ப்போம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.