Meenakshi Ponnunga: யமுனாவின் கல்யாணத்தை தடுத்து நிறுத்திய புஷ்பா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Meenakshi Ponnunga: யமுனாவின் கல்யாணத்தை தடுத்து நிறுத்திய புஷ்பா

Meenakshi Ponnunga: யமுனாவின் கல்யாணத்தை தடுத்து நிறுத்திய புஷ்பா

Aarthi V HT Tamil
Feb 15, 2023 02:52 PM IST

மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்டை பார்ப்போம்.

 மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்
மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட் அப்டேட்

இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் யமுனா கல்யாணத்திற்கு வந்த சில பெண்கள் வெற்றியிலும் வழிந்து பேச இதைக் கண்டு சக்தி எரிச்சல் அடைகிறாள்.

கார்த்திக்கின் குடும்பம் மண்டபத்திற்கு வர அவர்களை முறைப்படி அழைத்துச் செல்ல இதையெல்லாம் நீதிமனி மறைந்திருந்து பார்க்கிறான். பிறகு கோகிலாவிடம் மீனாட்சி வீட்டார் நகைகளை ஒப்படைக்கிறார்கள்.

அதன் பிறகு யமுனா அணிந்தது போக மீதமுள்ள நகைகளை தனியாக சென்று கோகிலா அணிந்து கொள்கிறாள். மாப்பிள்ளைக்கு பாத பூஜை செய்யும் சடங்கை வெற்றி முன் நின்று செய்கிறான். மேலும் மண மேடையில் யமுனாவின் அப்பா ஸ்தானத்திலிருந்து எல்லா சம்பிரதாயங்களையும் வெற்றி செய்கிறான்.

இதனால் வெற்றியை சக்தி பீலோடு பார்க்க நீதிமணி வெளியில் இருந்து ஆசிர்வாதம் செய்கிறார். மறுபக்கம் புஷ்பா காரில் வந்து கொண்டிருக்கிறாள்.

நகைக்கடைக்காரனையும் வர சொல்ல அவனும் வர, மண்டபத்திற்கு வெளியே நகைக்கடை காரனை வெற்றிக்கு பயப்பட வேண்டாம் என்று கூறி அழைத்து செல்கிறாள். உள்ளே கார்த்திக் யமுனாவின் கழுத்தில் தாலி கட்ட போகும் போது புஷ்பா கல்யாணத்த நிறுத்தி விட நகைக் கடைகாரனும் வர வெற்றி, மீனாட்சி, சத்தி என எல்லோரும் பதட்டமாகின்றனர்.

என் பத்திரத்தை வைத்து தான் கல்யாணம் செய்கிறேன் என்று மீனாட்சி சொல்ல, அது ரங்கநாயகியின் பத்திரம் என்று புஷ்பாவும் நகைக்கடை காரனும் நடந்ததை சொல்கிறார்கள். மேலும் இன்னும் கொஞ்ச நேரத்தில் ரங்கநாயகி வருவாள் உண்மை தெரியும் என புஷ்பா சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகிறார்கள்.

இதனால் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்து அறிய மீனாட்சி பொண்ணுங்க சீரியலை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.